UPDATED : பிப் 27, 2025 10:02 AM
ADDED : பிப் 08, 2025 06:36 AM

வீடுகளில் பூசணிக்காயை வைத்து சாம்பார், அல்வா, மோர் குழம்பு, கிரேவி, தயிர் பச்சடி, சூப் உட்பட வழக்கமாக டிஷ்களை செய்வதை பார்த்து இருப்போம். ஆனால் பூசணிக்காயில் பாஸ்தா கூட செய்யலாம்.
பாஸ்தா என்றாலே சிக்கன் பாஸ்தா, மசாலா பாஸ்தா என்று தான் சாப்பிட்டு இருப்பர். ஆனால் பூசணிக்காயில் செய்யும் பாஸ்தாவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர். இந்த பாஸ்தா கொஞ்சம் இனிப்பாக இருக்கும். ஆனால் சுவை நன்றாக இருக்கும். குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்சில் வைத்து கொடுத்து விடலாம். டின்னராக கூட பயன்படுத்தலாம். எப்படி செய்வது என்று பார்ப்போம்.
செய்முறை
அடுப்பை பற்ற வைத்து அதில் பெரிய பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். ஓரளவு கொதித்து வரும்போது, பாஸ்தாவை போடவும். சிறிதளவு உப்பும் போட்டு கொதிக்க விட்டு தனியாக எடுத்து வைக்கவும். பின், மஞ்சள் பூசணிக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு வேகவைத்து ஆற வைக்க வேண்டும். மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் முந்திரி பருப்பு, பால் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
தோசை கல்லில் எண்ணெய் சேர்த்து பன்னீரை சதுர வடிவில் நறுக்கி பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பன்னீர், அரைத்து வைத்த பூசணிக்காய் விழுது சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.
அதனுடன் வேகவைத்த பாஸ்தாவையும் சேர்த்து நன்றாக கிளறி 10 நிமிடத்தில் இறங்கினால் சுவையான பூசணிக்காய் பாஸ்தா தயார்.