ADDED : ஏப் 12, 2025 02:45 AM

வீட்டுக்கு விருந்தினர் வரும் போது, அவர்களுக்கு சிற்றுண்டி தயாரிக்க சில நேரங்களில் காய்கறிகள் இருக்காது. என்ன செய்வது என, கையை பிசைய வேண்டி வரும். இனி கவலையே வேண்டாம். படாபட் வெங்காய சாதம் செய்யலாம்.
செய்முறை
முதலில் குக்கரில் தேவையான தண்ணீர் ஊற்றி, அரிசி போட்டு சாதம் தயார் செய்யவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கவும். தக்காளியை சிறிதாக நறுக்கவும். அடுப்பை பற்ற வைத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு போட்டு மிதமான தீயில் வறுக்கவும்.
இதில் வேர்க்கடலை, முந்திரிப்பருப்பு போட்டு கிளறவும். அதன்பின் பூண்டு, மிளகு, கறிவேப்பிலை, வெங்காயம், தக்காளியை பொட்டு பொன்னிறமாக வதக்கவும். இந்த கலவையில் உப்பு, மஞ்சள் துாள், கரம் மசாலா, மிளகாய் துாள், தனியா துாள் போட்டு கிளறவும். இந்த கலவையில் சாதத்தை போட்டு கிளறவும்.
சாதம் நன்றாக கலந்த பின், அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். ஐந்து நிமிடம் ஆனதும், நறுக்கிய கொத்துமல்லி தழையை துாவினால், சுவையான வெங்காய சாதம் தயார்
- நமது நிருபர் -.

