ADDED : பிப் 08, 2025 06:36 AM

'ஒக்காரை' என்பது தமிழகத்தின் தென்மாவட்டங்களான மதுரை, திருநெல்வேலியிலும், கேரளாவின் சில பகுதிகளிலும் தீபாவளிக்கு தவறாமல் செய்யப்படும் இனிப்பு வகை.
ஒக்காரை இனிப்பு வகை பற்றி பெரும்பாலோனாருக்கு தெரிந்திருக்கவும் வாய்ப்பு இல்லை ஆனால், இதன் சுவை வேற வெவல் டேஸ்டாக இருக்கும். பருப்பில் எளிதாக செய்யக் கூடியது.
அன்னாசியில் ஒக்காரை செய்வது எப்படி என்று 'நம் வாசகரான' பெல்லந்துார் மீனலோஷினி என்பவர், தன் அனுபவத்தை அறுசுவை குழுவினரிடம் பகிர்ந்து கொண்டார்.
செய்முறை
பருப்பை பொன்னிறமாக வறுத்து, இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து நன்கு வடிகட்ட வேண்டும்.
பின், அன்னாசி துண்டுகள் சேர்த்து கெட்டியாக கரகரப்பாக அரைத்து ஆவியில் வேக வைத்து உதிர்த்து கொள்ள வேண்டும். வெல்லத்தில் கொஞ்சமாக நீர் சேர்த்து கெட்டியாக பாகு செய்யவும்.
நெய்யில் முந்திரியை போட்டு வறுத்து, பின் தேங்காய், உதிர்த்த பருப்பு, வெல்ல பாகு சேர்த்து கிளறி இறக்கவும். அன்னாசியின் சத்துகளுடன் சுவை, மணம் சேர்த்து ஒக்காரை அருமையாக இருக்கும்.