ADDED : பிப் 14, 2025 11:08 PM

பெரும்பாலான வீடுகளில் குழந்தைகளுக்கு உணவுகளை கொடுப்பது பெரும் சவாலாக உள்ளது. தற்போதைய குழந்தைகள் உணவை தேர்ந்தெடுப்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளனர். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான மதிய உணவாக எதை கொடுப்பது என்று தாய்மார்கள் யோசிக்கின்றனர்.
காய்கறிகளை சாப்பிடாததால் குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் பெரும்பாலும் கிடைப்பதில்லை. 20 நிமிடங்களில் தயாராக இருக்கும் சத்தான பீட்ரூட் பூரிகள் மற்றும் பரோட்டாக்கள் செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு -- 2 கப்
நறுக்கிய பீட்ரூட் -- 1 கப்
சிவரிக்கீரை -- 5 டீஸ்பூன்
உப்பு -- 1 டீஸ்பூன்
பொரிப்பதற்கு தேவையான எண்ணெய்
செய்யும் முறை:
பீட்ரூட் தோலை நீக்கி, சுத்தம் செய்து நறுக்கவும். ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைத்து, ஒரு கப் நறுக்கிய பீட்ரூட்டை மென்மையாகும் வரை சமைக்கவும். பின் தண்ணீரிலிருந்து எடுத்து குளிர்விக்கவும்.
வேகவைத்த தண்ணீரை தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
சமைத்த பீட்ரூட்டைமிக்சியில் அரைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சிவரிக்கீரை, உப்பு மற்றும் பீட்ரூட் எடுத்துக் கொள்ளவும். நன்கு கலந்து பீட்ரூட் சமைத்த தண்ணீரை சேர்த்து மென்மையான மாவு பதத்தில் பிசையவும்.
10 நிமிடம் மூடி வைக்கவும். மீண்டும் பிசைந்து சிறிய உருண்டைகளாக எடுத்து கொள்ளவும். பின், பூரி சைசில் தேய்த்து கொள்ளவும்.
எண்ணெயை சூடானதும், அதில் தேய்த்த பூரியை போடவும்.
கடாயில் இருந்து பூரியை எடுத்து எண்ணெய் வடியும் பாத்திரத்தில் வையுங்கள். சுவையான பீட்ரூட் பூரி தயார்
- நமது நிருபர் -.