sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஸ்பெஷல்/அறுசுவை/காளான் ஒயிட் பிரியாணி

காளான் ஒயிட் பிரியாணி

காளான் ஒயிட் பிரியாணி


UPDATED : ஜூன் 13, 2026 05:34 PM

ADDED : ஜூன் 13, 2026 04:10 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 13, 2026 05:34 PM ADDED : ஜூன் 13, 2026 04:10 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

தேவையான பொருட்கள்

200 கிராம் பட்டன் காளான் கட் செய்தது

1/2 கப் சின்ன வெங்காயம்

6 பச்சை மிளகாய் இரண்டாக கட் செய்தது

12 முந்திரி நைசாக அரைத்தது

2 ஸ்பூன் ப்ரெஷ் க்ரீம்

50 கிராம் கேரட் கட் செய்தது

100 கிராம் உருளைக்கிழங்கு கட் செய்தது

1கைப்பிடியளவு புதினா, கொத்தமல்லித்தழை

தேவையானஅளவு உப்பு

60 மிலி எண்ணெய், நெய்

2 பட்டை

6 இலவங்கம்

6 ஏலக்காய்

1 அன்னாசிப்பூ

2 மராட்டிமொக்கு

2பிரியாணி இலை

1 ஸ்பூன் எலுமிச்சை சாறு

350 கிராம் சீரக சம்பா அரிசி அல்லது 1+1/2 டம்ளர்

1+1/2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

செய்முறை முந்திரியை சுத்தம் செய்து அதை நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரிசியை கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். இதற்கிடையே குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும் மசாலா பொருட்களைப் போட்டு லேசாக வறுத்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து 1நிமிடம் வதக்கவும். பின் இதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.

காளானை எடுத்து அதை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். அதன் பின் பொடியாக நறுக்க வேண்டும். உப்பு சேர்த்து கட் செய்த காளான் மற்றும் கேரட், உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கவும். பின் மூடி 2 விசில் விட்டு இறக்கவும். இதில் முந்திரி விழுது, புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கி, ப்ரெஷ் க்ரீம் சேர்த்து இரண்டு பங்கு தண்ணீர் சேர்த்து கொதித்ததும் அரிசியைப் போட்டு எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து 2டேபிள் ஸ்பூன் நெய், கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து மூடி 1 விசில் விட்டு அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம் வேக வைக்கவும், இறக்கவும். சுவையான காளாண் ஒயிட் பிரியாணி தயாராகி விட்டது. அதை தயிர் பச்சடியுடன் பரிமாறலாம். இல்லை எனில் பட்டாணி குருமாவுடன் பரிமாறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us