சுவையான செட்டி நாடு மட்டன் குருமா தயாரிப்பது எப்படி?
சுவையான செட்டி நாடு மட்டன் குருமா தயாரிப்பது எப்படி?
UPDATED : ஜூன் 27, 2026 07:11 AM
ADDED : ஜூன் 27, 2026 04:10 AM
தேவையான பொருட்கள்மட்டன் - 1 கிலோநல்லெண்ணெய் - தேவையான அளவுஇஞ்சி, பூண்டு விழுது - 3 ஸ்பூன்உப்பு தேவையான அளவுமஞ்சள் துாள் - அரை ஸ்பூன்சோம்புத்துாள் - 1 ஸ்பூன்கொத்தமல்லித் தழை - சிறிதளவுகறிவேப்பிலை - சிறிதளவுதயிர் - 3 ஸ்பூன்முந்திரி பொடி - 250 கிராம்சீரகம் - 1 ஸ்பூன்சோம்பு - 2 ஸ்பூன்பட்டை - 3கிராம்பு - 4ஏலக்காய் - 3மிளகு - 1 ஸ்பூன்வெந்தயம் - 3 ஸ்பூன்பச்சை மிளகாய் - 4தக்காளி - 3மிளகாய்த் துாள் - 1 ஸ்பூன்தேங்காய் விழுது - 4 ஸ்பூன்நெய் - 2 ஸ்பூன்தண்ணீர் தேவையான அளவு
செய்முறை : முதலில் தக்காளி, வெங்காயம், புதினா, கொத்தமல்லித்தழை மற்றும் பச்சை மிளகாய்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின் மட்டனை நன்றாக கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் மட்டன் பாதி அளவு இஞ்சி, பூண்டு விழுது பாதியளவு, தக்காளி, மஞ்சள் துாள், தயிர், மிளகாய்த்துாள், கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை, முந்திரி பொடி, புதினா ஆகிய அனைத்தையும் ஒன்றாக சேர்த்து பிசைந்து 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், மீதமுள்ள இஞ்சி, பூண்டு விழுது மற்றும் கற்வேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின் மீதமுள்ள தக்காளி, மற்றும் தேவையான அளவு மஞ்சள் துாள், மிளகாய்த்துாள், சோம்புத்துாள், தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். கடைசியாக ஊற வைத்துள்ள மட்டன் கலவையை சேர்த்து குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.பிறகு விசில் அடங்கியவுடன் குக்கரை திறந்து அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து அத்துடன் சிறிதளவு தண்ணீர் விட்டு ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து சிறிதளவு நெய் மற்றும் கொத்தமல்லித்தழை துாவி இறக்கினால், சுவையான செட்டிநாடு மட்டன் குருமா தயார்.
