ADDED : ஜூன் 19, 2026 10:31 PM

- நமது நிருபர் -: வீட்டிலேயே எளிய முறையில், உடலுக்கு ஆரோக்கியமான ஓட்ஸ் லட்டு தயாரிக்கலாம். இதை செய்ய அதிக நேரம் தேவைப்படாது. அதே சமயம் சுவை அற்புதமாக இருக்கும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள்
l ஓட்ஸ் - 1 கப்
l நெய் - 2 டீஸ்பூன்
l வெல்லம் - ¼ கப்
l பாதாம் - 5
l முந்திரி - 5
செய்முறை
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து கொள்ளவும். இதில், நெய் ஊற்றி கொள்ளவும். நெய்யுடன், ஓட்ஸ் சேர்த்து ஐந்து நிமிடம் லேசாக வறுக்கவும். பின், ஓட்ஸ் தானியத்தை தனியாக வேறு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும். அதே போல, பாதாம், முந்திரியை லேசாக வறுத்து தனியாக எடுத்து கொள்ளவும்.
பின், அதே வாணலியில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
தண்ணீர் கொதித்ததும், அதில் வெல்லம் சேர்க்கவும். வெல்லம் பாகு போன்ற பதத்திற்கு வந்ததும், அதில் வறுத்து வைத்த ஓட்ஸ் சேர்த்து கொள்ளவும்.
லட்டு உருண்டை பிடிக்கும் பதத்திற்கு கலவை வரும் வரை நன்றாக கிளற வேண்டும். இதில், வறுத்த பாதாம், முந்திரியை போட்டு கிளற வேண்டும்.
பின், உள்ளங்கைகளில் நெய் தடவி, லட்டு உருண்டைகளை பிடித்து கொள்ளவும். அவ்வளவு தான் ஓட்ஸ் லட்டு தயார்!
