
- நமது நிருபர் -:
சாம்பார் சாதம், ரசம் சாதத்துடன் சேர்த்து, 'சைடு டிஷ்'ஷாக சாப்பிட இந்த வாரம் சோயா முட்டை வறுவல் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
l சோயா உருண்டைகள் -- 1 கப் (சுமார் 100கி)
l முட்டை -- 2
l சோள மாவு -- 2 அல்லது -3 தேக்கரண்டி
l மிளகாய் துாள் -- 1 தேக்கரண்டி
l மிளகு துாள் -- 1/2 தேக்கரண்டி
l மஞ்சள் துாள் -- 1/2 தேக்கரண்டி
l உப்பு -- தேவையான அளவு
l எண்ணெய் -- 3 தேக்கரண்டி
வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது -- தேவைப்பட்டால்
செய்முறை
l சோயா உருண்டைகளை வெந்நீரில் போட்டு 5- - 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் தண்ணீரை நன்கு பிழிந்து தனியாக வைத்து கொள்ளவும்.
l ஒரு பாத்திரத்தில், பிழிந்த சோயா உருண்டைகள், 2 முட்டைகளை உடைத்து ஊற்றி, சோள மாவு, மிளகாய் துாள், மிளகு துாள், மஞ்சள் துாள், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
l ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
l மசாலா தடவிய சோயா முட்டை கலவையை சேர்த்து, மிதமான தீயில் நன்கு கிளறி, பொன்னிறமாகும் வரை வறுத்தால், சோயா முட்டை வறுவல் தயார்.
இதை சாம்பார் சாதம், ரசம் சாதம் போன்றவற்றுக்கு தொட்டு சாப்பிடலாம்.

