UPDATED : நவ 07, 2026 02:34 AM
ADDED : நவ 06, 2026 07:24 PM

- நமது நிருபர் -: முடக்கத்தான் கீரை, முடக்குவாதம், கீல்வாதம், மூட்டு மற்றும் இடுப்பு வலி ஆகியவற்றை சரிசெய்யும். வயதானவர்களுக்கு ஏற்றது.
தேவையான பொருட்கள்
எண்ணெய் - தேவையான அளவு
பச்சரிசி - 3 கப்
உளுந்து - ஒரு கப்
வெந்தயம் - ஒரு மேஜை கரண்டி
முடக்கத்தான்
கீரை - 2 கப்
உப்பு - தேவை யான அளவு
செய்முறை
அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றும் 8 கப் நீரில், நான்கு முதல் ஆறு மணி நேரம் ஊற வைத்து கொள்ளுங்கள்.
ஊறிய பின் அதை வடித்து, சிறிது நீர் சேர்த்து கிரைண்டரில் அரைக்கவும். பின், ஒரு மேஜைகரண்டி ஈஸ்ட் சேர்க்க வேண்டும். முடக்கத்தான் கீரையை நன்றாக சுத்தம் செய்து, இலைகளை மட்டும் அரைக்கவும் இப்போது அரிசி பருப்பு கலவையை சிறிது சிறிதாக சேர்த்து, வழவழப்பான மாவாக அரைக்கவும்.
மாவு கலவையை அரைத்த பிறகு, உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். 8 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் அப்படியே வைக்கவும்.
மாவு கலவை புளிக்க வைக்கப்பட்டு, நன்கு உப்பி வர வேண்டும். தோசை கல்லை சூடாக்கவும். ஒரு கரண்டி மாவை எடுத்து, தோசை கல்லில் மெல்லியதாக பரப்பவும். ஓரங்களில் எண்ணெய் தெளிக்கவும். அடிப்பகுதி லேசான பொன்னிறமாக மாறி, ஓரங்கள் மேலே எழும்போது, அடுப்பிலிருந்து இறக்கவும். மீதமுள்ள மாவு கலவைக்கும் இதையே செய்யவும்
விருப்பமான சட்னி அல்லது சாம்பார், பொடியுடன் சேர்த்து சாப்பிடலாம்.
