sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மே 02, 2026 ,சித்திரை 19, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

ஸ்பெஷல்

/

அறுசுவை

/

 தெலுங்கானா புகழ் சர்வ பிண்டி

/

 தெலுங்கானா புகழ் சர்வ பிண்டி

 தெலுங்கானா புகழ் சர்வ பிண்டி

 தெலுங்கானா புகழ் சர்வ பிண்டி


ADDED : மே 02, 2026 03:40 AM

Google News

ADDED : மே 02, 2026 03:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர் -: ஆந்திரா, தெலுங்கானாவில், சர்வ பிண்டி என்ற அரிசி மாவு அப்பம் மிகவும் பிரபலம். எளிதில் செய்யக்கூடிய சர்வ பிண்டியை, காலை, மாலை நேரங்களில் தின்பண்டங்களாக ருசிக்கலாம். இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.

தேவையான பொருட்கள்

l அரிசி மாவு - 6 கப்

l கடலை பருப்பு -- 12 ஸ்பூன்

l வெள்ளை எள் -- 12 ஸ்பூ ன்

l சீரகம் -- 2 டீஸ்பூன்

l இஞ்சி -- 50 கிராம்

l பூண்டு -- 50 கிராம்

l பச்சை மிளகாய் -- 20

l வெங்காயம் -- 6 பெரிய வெங்காயம்

l மஞ்சள் துாள் -- ஒரு ஸ்பூன்

l மிளகாய் துாள் -- 2 ஸ்பூன்

l உப்பு -- 2 ஸ்பூன்

l நல்லெண்ணெய் -- வறுப்பதற்கு

l தண்ணீர் -- தேவையான அளவு

l கறிவேப்பிலை -- ஒரு கைப்பிடி

l கொத்தமல்லி -- ஒரு கைப்பிடி

செய்முறை

l அம்மிக்கல்லில், 50 கிராம் பூண்டு, 50 கிராம் இஞ்சி, இரண்டு டீஸ்பூன் சீரகம் போட்டு அரைக்கவும். இதை வெளியே எடுத்த பின், 20 பச்சை மிளகாயை இடிக்கவும்.

l சர்வ பிண்டி செய்முறையில் அளவீடுகள் மிக முக்கியம். ஆறு கப் அரிசி மாவிற்கு, 12 ஸ்பூன் கடலை பருப்பு, 12 ஸ்பூன் வெள்ளை எள் என்பது கணக்கு.

l கடலை பருப்பை தண்ணீரில் கழுவி அரை மணி நேரம் ஊறவைக்கவும். அடுத்து, 12 ஸ்பூன் வெள்ளை எள்ளை மிக்ஸியில் போட்டு பொடியாக அரைக்கவும்

l இப்போது பெரிய பாத்திரத்தில் ஆறு கப் அரிசி மாவு போட்டு அதனுடன் ஊறவைத்த கடலை பருப்பு, அரைத்த வெள்ளை எள், ஆறு பெரிய வெங்காயம், அம்மியில் இடித்த பச்சை மிளகாய், -சீரகம், இஞ்சி - பூண்டு கலவை சேர்த்து மிக்ஸ் செய்யவும்.

l அடுத்ததாக இரண்டு ஸ்பூன் உப்பு, இரண்டு ஸ்பூன் மிளகாய் துாள், ஒரு ஸ்பூன் மஞ்சள் துாள் சேர்க்கவும். தலா ஒரு கைப்பிடி கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை போடுங்கள்.

l கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கடைகளில் போண்டா மாவு தயார் செய்வது போல் சர்வ பிண்டி மாவு தயாரிக்கவும்.

l கடாயில் எண்ணெய் தடவி இரண்டு நெல்லிக்காய் சைஸில், மாவு எடுத்து வடை தட்டுவது போல் தட்டி வைத்து ஆங்காங்கே ஓட்டை போட்டு மிதமான சூட்டில் ஐந்து நிமிடங்களுக்கு வேக வறுக்கவும்.

l அதன்பிறகு மறுபுறம் திருப்பி இரண்டு நிமிடங்களுக்கு வேக விடுங்கள். சர்வ பிண்டி ஸ்நாக் ரெடி. இதை அப்படியே சாப்பிடலாம்.






      Dinamalar
      Follow us