ADDED : ஜூலை 11, 2025 11:35 PM

பீட்சா என்றாலே குட்டீஸ்கள் குஷியடைவர். பீட்சாவை கடைகளில் ஆர்டர் செய்ய வேண்டும் என்பது இல்லை. வீட்டிலும் சுவையான 'வெஜ் பீட்சா' செய்யலாம்.
செய்முறை
ஒரு பாத்திரத்தில் மைதா மாவுடன், இன்ஸ்டன்ட் ஈஸ்ட் சேருங்கள். அதன்பின் சர்க்கரை, உப்பு போட்டு நன்றாக பிசையுங்கள்.
இந்த கலவையில் எண்ணெய் அல்லது வென்னீர் சிறிது, சிறிதாக ஊற்றி மிருதுவாக பிசைய வேண்டும். சப்பாத்தி பதத்துக்கு பிசைந்து, அதன் மீது எண்ணெய் ஊற்றி, சுத்தமான வெள்ளை துணியை போட்டு மூடி வைக்கவும்.
ஒன்று முதல் இரண்டு மணிநேரம் ஊற விடவும். அதன்பின் இதனை மீண்டும் பிசைந்து கொள்ளவும். இதை பீட்சா பேனில் போட்டு பரப்பவும். இதன் மீது முள் கரண்டியால் ஆங்காங்கே குத்தி விடவும். இதன் மீது பீட்சா மசாலாவை தடவ வேண்டும்.
அதன் பின் சீஸ், நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, மிளகு, சுவீட் கார்ன், உலர்ந்த மிளகாய் துண்டுகள், தக்காளியை துாவி அலங்கரித்து, மைக்ரோ ஓவனில் வைத்து 10 முதல், 15 நிமிடம் வேக வைத்தால், சுவையான வெஜ் பீட்சா ரெடி.

