ADDED : ஜூலை 26, 2025 05:07 AM

கண்ட கண்ட இடங்களில் காணப்படும் தின்பண்டங்களை தின்று, சிறுவர்களின் குட்டி வயிறு பாழாவதை விட, வீட்டிலேயே ஆரோக்கியமான தின்பண்டங்களை தயாரித்துக் கொடுக்கலாம். பாதாம் புரி இனிப்பு முயற்சித்து பாருங்கள்.
செய்முறை ஒரு அக லமான பாத்திரத்தில், மைதா, சிரோடி ரவை, உப்பு, சமையல் சோடா, கேசரி பொடி போட்டு கலக்கவும். அதில் நெய் ஊற்றவும். அதன்பின் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து, சிறிது நேரம் ஊற வைக்கவும்.
அதன்பின் அடுப்பில் பாத்திரம் வைத்து, சிறிது தண்ணீர் ஊற்றி, அதில் சர்க்கரை சேர்த்து பாகு காய்ச்சவும். அதில் ஏலக்காய் துாள் சேர்க்கவும். பிசைந்து வைத்துள்ள மாவை, பூரி போன்று திரட்டி, முக்கோணமாக மடித்து, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொறிக்கவும். இவற்றை சர்க்கரை பாகில் போட்டு புரட்டி, தட்டில் வைக்கவும். அதே போன்று அனைத்து பூரிகளையும் பொறித்தெடுத்து, சர்க்கரை பாகில் புரட்டவும்.
அகலமான தட்டில் வைத்து, இவற்றின் மீது தேங்காய் துருவலை துாவினால், இனிப்பான பாதாம் புரி தயார். குட்டீஸ்கள் மிகவும் விரும்புவர். செய்வதும் எளிது.
- நமது நிருபர் -