ADDED : ஏப் 05, 2025 01:20 AM

கொத்தவரங்காயில் நார், சுண்ணாம்பு, இரும்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ், போலிக் ஆசிட் போன்ற சத்துகள் அதிகம் நிறைந்துள்ளன. மலச்சிக்கலை போக்கவும் உதவுகிறது.
கொத்தவரங்காயை உணவில் அதிகம் சேர்த்து கொள்வதன் மூலம், இதய நோய் அபாயத்தை குறைக்க முடியும். கொத்தவரங்காய் செடி வலி நிவாரணியாகவும், கட்டிகளை கரைப்பானாகவும் உள்ளது.
கொத்தவரங்காயில் வெறும் பொரியல் மட்டும் தான் செய்ய முடியும் என்று பெரும்பாலானோர் நினைப்பது உண்டு. ஆனால் அதில் வைக்கப்படும் புளி குழம்பு வேற லெவலில் இருக்கும்.
கொத்தவரங்காயை வைத்து செய்யப்படும் வித்தியாசமான டிஷ் ஆக பால் கறி உள்ளது. இதை செய்வது மிகவும் எளிதாக இருக்கும்.
செய்முறை
கொத்தவரங்காயை தண்ணீரில் நன்கு அலசி, சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளுங்கள். அடுப்பை ஆன் செய்து வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு சேர்த்து பொரிந்ததும், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.
நறுக்கிய வெங்காயம், மஞ்சள், மல்லி, மிளகாய் துாள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் நறுக்கி வைத்திருந்த கொத்தவரங்காய் சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக விட வேண்டும்.
பாதி வெந்ததும் தேங்காய் பால் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும். காய், பால் ஒன்று சேர்ந்து கொதித்து கெட்டியாக வரும் போது, மல்லி இலை துாவி அடுப்பை ஆப் செய்யவும்.
சாம்பார் சாதம், ரசம் சாதத்திற்கு செமையான காம்பினேஷன் ஆக இருக்கும். சூடான சாதத்தில் நெய்விட்டு, கொத்தவரங்காய் பால் கறி சேர்த்து சாப்பிட்டால் சுவை பட்டையை கிளப்பும்.
- நமது நிருபர் -

