லெமன் சாதம் செய்யும்போது, நிறைய வேர்க்கடலை, கடலை பருப்பு சேர்த்தால் சுவை அதிகமாக இருக்கும். பருப்பு வேக வைக்கும் முன் 10 நிமிடங்கள் வெந்நீரில் ஊறவைத்தால், விரைவில் நன்றாக வேகும். பூசணிக்காய் பொரியல் செய்யும்போது இறுதியாக உளுந்தை அரைத்து சேர்த்தால் சுவையாக இருக்கும்.
இட்லி பொடி செய்யும்போது ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலை சேர்த்து வறுத்து அரைத்தால் சுவையாக இருக்கும். போளிக்கு மாவு செய்யும்போது ஆறு மணி நேரம் ஊறவைத்தால் சுவை அதிகரிக்கும். பச்சை மிளகாய் காம்புகளை நீக்கிவிட்டு குளிர்சாதன பெட்டிக்குள் வைத்தால், நீண்ட நாள் கெட்டுப் போகாமல் இருக்கும். பஜ்ஜி மாவில் நான்கு பூண்டு பற்களை அரைத்து சேர்த்து ஒரு ஸ்பூன் சீரகப் பொடி கலந்து பஜ்ஜி செய்து சாப்பிட்டால், சுவை அற்புதமாக இருக்கும்.
கார பணியாரம் சுடும்போது வெங்காயத்தை எண்ணெயில் சேர்த்து வதக்கி பிறகு மாவுடன் சேர்த்து பணியாரம் சுட வேண்டும். தக்காளி தொக்கு செய்யும்போது பட்டை கிராம்பு சேர்த்து தாளித்தால் சுவையாக இருக்கும். உளுந்துவடை செய்யும்போது மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து சேர்த்தால் சுவையும் கூடுதலாக இருக்கும்
- நமது நிருபர் -

