UPDATED : அக் 24, 2026 02:50 AM
ADDED : அக் 23, 2026 07:24 PM
- நமது நிருபர் -
l வெங்காய தயிர் பச்சடி செய்யும் போது, நறுக்கிய வெங்காயத்தில் சிறிதளவு உப்பு சேர்த்தால், பச்சடி கூடுதல் சுவையாக இருக்கும்
l உருளைகிழங்கு காரிக்கறியில் அரை கரண்டி புளிப்பு இல்லாத, கெட்டி தயிர் சேர்த்து வதக்கினால் கூடுதல் சுவையாக இருக்கும்
l சூடான பாலில் எலுமிச்சை சாறு சேர்ப்பதற்குப் பதில், சற்றே ஆறிய பாலில் தயிர் கலந்து, பன்னீர் தயாரித்தால் மென்மையாக இருக்கும்
l பருப்பு பாயசம் செய்யும் போது, சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் சேர்த்து செய்தால், கூடுதல் சுவை கிடைக்கும்
l துவையல் அரைக்கும் போது, புளிக்குப் பதிலாக, மாங்காய் துருவல் அல்லது தக்காளி சேர்த்தால் சுவை துாக்கலாக இருக்கும்
l சுண்டல் செய்த பின், அதன் மீது சிறிதளவு காரப்பூந்தி துாவி பரிமாறினால் மொமொறுப்பான சுவையுடன் இருக்கும்
l சப்பாத்திக்கு கையால் மாவு பிசைவதற்கு முன், சூடான நெய் விட்டு பிசிறிய பிறகு சூடான பால் விட்டால் எளிதாக பிசையலாம்.
l கோவக்காய் பொரியல் செய்யும் போது, சிறிதளவு மிளகு துாள் சேர்த்தால் சுவை கூடும்.
l ஜவ்வரிசியை ஊற வைத்து இஞ்சி, பச்சை மிளகாய், சிறிது தயிர், கறிவேப்பிலை சேர்த்து வடை செய்தால் ருசியாக இருக்கும்.
l கீரை கூட்டு செய்யும் போது, பூண்டு மற்றும் சோம்பை லேசாக இடித்து சேர்த்துக் கொண்டால், கீரை கூட்டு வாசமாக இருக்கும்
