சிறியவர் முதல் பெரியவர் வரை ருசிக்கும் கோதுமை ரவை தோசை
சிறியவர் முதல் பெரியவர் வரை ருசிக்கும் கோதுமை ரவை தோசை
ADDED : செப் 27, 2025 04:51 AM

கோதுமை ரவையில் உப்புமா மட்டுமின்றி, சுவையான தோசையும் செய்யலாம். இது சிறார்கள் முதல், பெரியவர்கள் வரை, அனைவருக்கும் பிடிக்கும். இதை எப்படி செய்வது என, பார்க்கலாமா?
செய்முறை முதலில் ஒரு கிண்ணத்தில் கோதுமை ரவை, அரிசி மாவு, தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து சிறிது நேரம் ஊற விடவும். கொப்பரை தேங்காயை துருவிக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லி தழை, கறிவேப்பிலையை மெல்லியதாக நறுக்கவும்.
ஏற்கனவே ஊற வைத்துள்ள கோதுமை ரவை, அரிசி மாவை, மிக்சியில் போட்டு, தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். மாவை பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். இதில் தேவையான அளவு உப்பு, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லி தழை, கறிவேப்பிலை, சமையல் பேக்கிங் சோடா, தயிர் சேர்த்து கலக்கவும். மாவு தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும்.
அதன்பின் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். காய்ந்ததும் மாவை தோசையாக வார்க்கவும். மிதமான தீயில் வேக விடவும். இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேக வைக்கவும். வழக்கமான தோசை போன்று ஊற்றாமல், தடிமனாக அடை போன்று ஊற்ற வேண்டும்.
சூடாக சாப்பிட்டால், கோதுமை ரவை தோசை சுவையாக இருக்கும். தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி பொருத்தமாக இருக்கும்
- நமது நிருபர் - .