/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
நாடக பிரியர்களுக்கு இன்று பெங்களூரில் 'செமையான விருந்து'
/
நாடக பிரியர்களுக்கு இன்று பெங்களூரில் 'செமையான விருந்து'
நாடக பிரியர்களுக்கு இன்று பெங்களூரில் 'செமையான விருந்து'
நாடக பிரியர்களுக்கு இன்று பெங்களூரில் 'செமையான விருந்து'
ADDED : மார் 02, 2025 06:25 AM

விறுவிறுப்பாக இயங்கி வரும் இன்றைய உலகில் பல துறைகள் அழிந்து வருகிறது; காலப்போக்கில் காணாமல் போகிறது. இதில் நாடகமும் ஒன்று. இன்றைய சினிமாவிற்கு முன்னோடி நாடகங்களே. சினிமாவில் போற்றப்படும் பலரும் நாடகத்தில் இருந்து வந்தவர்கள் என்பதை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.
நாடகங்கள் வரலாறு, வாழ்வியலை பற்றி பேசுபவை. ஏன் சினிமாவில் சொல்ல முடியாத கருத்துகள் கூட மேடை நாடகங்களில் வெளிப்படும். இன்றோ இத்துறை மெல்ல மெல்ல அழிந்து வருகிறது. இதற்கு பார்வையாளர்கள் இல்லை என்பதே மிகப்பெரிய காரணமாக உள்ளது.
ஒத்துழைப்பு
இது போன்ற சீர்மிகு, சிந்தனையை வளர்க்கக்கூடிய துறையை அழிய விட கூடாது. அதற்கு பொது மக்களாகிய நாமும் ஒத்துழைப்பு தர வேண்டும். ஒத்துழைப்பு என்றவுடன் நீங்கள் பணம் கொடுத்து எல்லாம் உதவி செய்ய தேவையில்லை. மாறாக, உங்கள் பகுதியில் நடக்கும் நாடகங்களை கண்டு களித்தால் மட்டும் போதுமே.
இப்போது, உங்கள் மனதில் ஒரு எண்ணம் எழலாம். பெங்களூரு போன்ற நகரத்தில் நாடகம் எங்கே நடக்கிறது என நினைக்கலாம். உங்கள் நினைவு நனவாக்கும் வகையில் இன்று பெங்களூரு, வசந்த் நகர் பகுதியில் உள்ள 'அலையன்ஸ் பிராங்சைஸ் டி'யில் நாடகம் நடக்க உள்ளது.
அதுவும், மிகச் சிறந்த கருத்துகளுடன், முழுக்க இளைஞர்களால் நாடகம் நடத்தப்பட உள்ளது. இந்த நாடகம் ஜார்ஜ் ஆர்வெல்ஸ் எழுதிய 'அனிமல் பார்ம்' எனும் புகழ்பெற்ற புத்தகத்தின் கதையை பிரதிபலிக்க உள்ளது.
பயன்பெறலாமே
இந்த நாடகம் அரசியல், அதிகாரம், புரட்சி, துரோகம் போன்ற விஷயங்களை எடுத்து கூற உள்ளது. நீதி, ஒடுக்கப்பட்டவர்கள் எனும் அறியப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகள் என பலவற்றை பற்றி பேச உள்ளது. இந்த நாடகத்தை அனைவரும் பார்த்து பயன்பெறுமாறு நாடக குழுவினர் கேட்டுக்கொண்டு உள்ளனர்.
இந்த நாடகம் அல்கெமி தியேட்டர் சொசைட்டியால் நடத்தப்பட உள்ளது. இந்த நாடகத்தின் இயக்குறர் சாகேத் ஜனார்த்தனா கூறுகையில், ''ஒடுக்கப்பட்டவர்கள், ஆட்சியாளர்களுக்கு எதிரான கிளர்ச்சியை பற்றி தான் அனிமல் பார்ம் புத்தகத்தின் சுருக்கமாக இருக்கும். விலங்குகளுக்கு நடக்கும் கொடுமைகள் பற்றியும் தகவல்கள் உள்ளன,''
நாடகத்தை பார்ப்பதற்கு ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இன்று மதியம் 3:30 மணி மற்றும் இரவு 7:30 மணி என இரு காட்சிகள் நடத்தப்பட உள்ளன.
- நமது நிருபர் -