/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்சில் 12 வயது தாவணகெரே சிறுவன்
/
இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்சில் 12 வயது தாவணகெரே சிறுவன்
இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்சில் 12 வயது தாவணகெரே சிறுவன்
இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்சில் 12 வயது தாவணகெரே சிறுவன்
ADDED : அக் 25, 2025 10:58 PM

தாவணகெரே டவுன் வித்யாநகரில் வசிக்கும் நிரஞ்சன் குமார் - சந்திரபிரபா தம்பதி மகன் சிவராஜ் கவுடரு, 12. தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் இவர், காந்தாரி வித்யா எனும் கண்ணை கட்டிக் கொண்டு மற்றவர்கள் கையில் வைத்திருக்கும் பொருட்களை கண்டுபிடித்துக் கூறும் அசாத்திய திறமைக்காக இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
இதுகுறித்து சிவராஜ் தந்தை நிரஞ்சன் குமார் கூறியதாவது:
கண்ணை மூடிக் கொண்டு மற்றவர்கள் கையில் இருப்பதை கண்டுபிடிப்பது அரிய கலை. இந்த கலையை, தாவணகெரே வித்யாரம்ப குருகுலத்தின் மஞ்சுநாத் பூஜார் குருஜியிடம் இருந்து கற்றுக் கொண்டார்.
கண்ணை துணியால் மூடி, மற்றவர்கள் கையில் என்ன உள்ளது என்பது பொருளின் வாசனை, ஒலி மூலம் சிவராஜ் கண்டுபிடிக்கிறார். அதிக எழுத்துகள் கொண்ட 100 ஆங்கில வார்த்தைகளை 12 நிமிடம் 23 வினாடிகளில் கூறினார். பேப்பரில் ஏதாவது எழுதிக் கொடுத்தாலும், கண்ணை மூடிக் கொண்டே அந்த பேப்பரில் என்ன எழுதி இருக்கிறது என்பதையும் கண்டுபிடிக்கும் திறன் அவரிடம் உள்ளது.
அவரின் திறமையை அங்கீகரிக்கும் வகையில், கண்ணை மூடிக் கொண்டு செய்த சாதனைகளை, இந்தியா புக் ஆப் ரெக்காட்சுக்கு வீடியோ, புகைப்படம் அனுப்பி வைத்தோம். இதை பார்த்த பின், சிவராஜ் பெயர் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்சில் சேர்க்கப்பட்டது. ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்சிலும் அவரது பெயரை சேர்க்கும் முயற்சியில் ஈடுபடுகிறோம். என் மகனை நினைத்து முழு குடும்பமும் பெருமைப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் - .

