/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
ரூ . 1க்கு துணி விற்று 'ஆடை வங்கி' நடத்தும் தொண்டு நிறுவனம்
/
ரூ . 1க்கு துணி விற்று 'ஆடை வங்கி' நடத்தும் தொண்டு நிறுவனம்
ரூ . 1க்கு துணி விற்று 'ஆடை வங்கி' நடத்தும் தொண்டு நிறுவனம்
ரூ . 1க்கு துணி விற்று 'ஆடை வங்கி' நடத்தும் தொண்டு நிறுவனம்
ADDED : ஜூலை 19, 2025 11:24 PM

ஒரே எண்ணம் கொண்ட நான்கு நண்பர்களால் உருவான 'இமேஜின் அறக்கட்டளை' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், ஏழை மக்களுக்காக 'ஆடை வங்கி' துவக்கி நடத்தி வருகின்றனர்.
'இமேஜின் அறக்கட்டளை' 2013ல் மெலிசா நோரன்ஹா, நிதின் குமார், விக்னேஷ், வினோத் லோபோ ஆகிய ஒரே எண்ணம் கொண்ட நான்கு நண்பர்களால் துவக்கப்பட்டது. ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யும் வகையில் துவக்கினர்.
உதயம்
இது தொடர்பாக நண்பர்கள் நான்கு பேரும் கூறியதாவது:
நாங்கள் ஏழை மக்களுக்காக 'ஆடை நிறுவனம்' துவங்க காரணமாக இருந்தது, கொரோனா கால கட்டம் தான்.
இக்காலகட்டத்தில் நாம் அனைவரும் வீட்டில் இருந்து பணி செய்த போது, ஏழைகள் சிரமப்பட்டனர். புதிய ஆடைகள் கூட வாங்க முடியாமல், பழைய ஆடைகளையே அணிந்து வந்தனர்.
அத்துடன் வீட்டில் ஒருவருக்கு ஆடை எடுக்க, ஆண்டுக்கு 2,000 ரூபாய் வரை செலவிடுகின்றனர். இதற்கு மாற்று வழி என்ன என்று யோசித்த போது தான், தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரில் 20 ஆண்டுகளுக்கு முன், 'ஆடை வங்கி' துவங்கப்பட்டது. இதற்கு பல தரப்பில் இருந்தும் ஆதரவு பெருகிறது.
இதையே பெங்களூரில் துவக்க முடிவு செய்தோம். 2021ல் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி, எண் 97, லவ குஷா லே - அவுட், பி.அக்ரஹாராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் துவக்கினோம்.
ஆடைகளை சேகரிக்க, நகரின் பல பகுதிகளில் உள்ள பள்ளிகள், கல்லுாரிகள், சங்கங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சென்று, எங்களின் திட்டம் குறித்து விவரித்தோம்.
சேகரித்த ஆடைகளில், இரண்டாவது முறையாக பயன்படுத்த தகுதியான ஆடைகளை தேர்வு செய்தோம்.
ஞாயிறுதோறும்...
பின், அதனை துவைத்து, சலவை செய்து, 'ஆடை வங்கி'யில் வைப்போம். இந்த வங்கி ஞாயிற்றுகிழமை தோறும், காலை 11:00 முதல் மாலை 4:00 மணி வரை திறந்திருக்கும்.
யாரும் இலவசமாக வாங்க தயங்குகின்றனர். எனவே, 1 ரூபாய் என விலை நிர்ணயித்தோம். இதில் கிடைக்கும் நிதியை கூட, மற்ற சமூக நல திட்டங்களுக்கு பயன்படுத்துகிறோம்.
'ஆடை வங்கி'யில், மதம், வயது, பாலினம், மொழி வேறுபாடு என்று எதுவும் கிடையாது. அனைவரும் வந்து செல்லலாம். 'ஆடை வங்கி' என்பது புரட்சிகரமான மாற்றத்தின் ஆரம்பம் என்று நம்புகிறோம்.
இங்கு ஆடைகள் கிடைக்கும் என்று போஸ்டர்கள், நோட்டீஸ்கள் மூலம் குடியிருப்பு பகுதிகளில் வினியோகிப்போம்.
வரும் நாட்களில் பொம்மைகள், காலணிகள், மருந்துகள், எழுதுபொருள், பாத்திரங்கள் போன்ற வீட்டு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மேம்படுத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் விபரங்களுக்கு 98867 01145 என்ற மொபைல் போன் எண்ணிலும்; theimaginetrust.org என்ற இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.
- நமது நிருபர் -