/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
பெங்களூரு வந்து கன்னடம் கற்ற அமெரிக்கர்
/
பெங்களூரு வந்து கன்னடம் கற்ற அமெரிக்கர்
ADDED : மே 04, 2025 04:57 AM

தங்கள் குழந்தைகள் தாய்மொழியில் கல்வி கற்பதை விட, ஆங்கில மொழி பாடத்திட்டத்தில் சேர்க்கும் பெற்றோர் மத்தியில், படிப்புக்காக பெங்களூரு வந்தவர், இங்கேயே தொழில் துவங்கி தொழிலதிபராகி கன்னடம் கற்றுள்ளார்.
ஆம். அமெரிக்காவின் வெர்ஜினியாவை சேர்ந்த பர்ட் முல்லர், 34. இவர், கல்லுாரியில் இசை, பொதுக் கொள்கை குறித்த பாடம் படித்து வந்தார். கல்வி சுற்றுலாவுக்காக தன் வகுப்பு தோழர்களுடன், 2010ல் இந்தியாவுக்கு வந்தார்.
யோசனை
ஒரு நாள் மதிய நேரம், எங்கள் வகுப்பு தோழிகள், நண்பர்கள் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.
அப்போது, மெக்சிகனை சேர்ந்த என் வகுப்பு தோழி, சிப்ஸ், சல்சா, பீன்ஸ், டோரிட்டாஸ் சேர்த்து உணவு வழங்கினார். மிகவும் நன்றாக இருந்தது.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் அவர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது அந்த வீட்டின் உரிமையாளர் குடும்பத்தினருக்கு, எங்கள் தோழி 'மெக்சிகன் பரிடோஸ்' செய்து கொடுத்தார். அதை அவர்கள் ரசித்து சாப்பிட்டனர்.
இந்தியர்கள், மெக்சிகன் உணவை விரும்பி சாப்பிடுவதை உணர்ந்தார். அப்போதுதான் அவருக்கு, ரெஸ்டாரென்ட் துவங்க வேண்டும் என்ற யோசனை தோன்றியது.
தன் நண்பர்கள் வேலைக்காக ஸ்பெயின், ஐரோப்பா நாடுகளுக்கு செல்ல, இவர், இந்தியாவை தேர்ந்தெடுத்தார். 2012ல் கல்லுாரி படிப்பை முடித்த பின், குடும்பத்தினர், நண்பர்களிடம் கூறி கடன் வாங்கி வந்தார்.
முதல் ரெஸ்டாரென்டை பெங்களூரில் துவக்கினார். இது மிகப்பெரிய வெற்றி பெற்றது. பலரும் கலிபோர்னியா பரிடோஸ் விரும்பி சாப்பிட்டனர். முதல் ஆண்டிலேயே லாபத்தை தந்தது. இதை உணர்ந்த அவர், சென்னை, ஹைதராபாத், புதுடில்லி என நாடு முழுதும் 103 கிளைகள் துவக்கினார். ஆண்டுக்கு, 1,920 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருகிறார்.
சக்சஸ்
இதுகுறித்து அவர் கூறியதாவது:
இந்தியாவில் உள்ள காய்கறிகளுக்கும், அமெரிக்காவில் உள்ள காய்கறிகளுக்கும் பல வித்தியாசங்கள் இருந்தன. ஆரம்பத்தில் பொருட்களை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்து, கலிபோர்னியா பரிடோஸ் தயாரித்து வந்தோம்.
பின் நாளடைவில் நாங்களே சொந்தமாக விவசாய நிலம் வாங்கி, தக்காளி விதைத்தோம். அந்தாண்டு பெய்த மழையாலும்; 500 அவகாடோ மரம் வளர்த்தோம். அதையும், உணவு தேடி வந்த யானைகள், நாசம் செய்தன.
என் தாய் தடகள வீராங்கனை. “உன் இலக்கை எட்டும் வரையில், உன் முயற்சியில் இருந்த விலகாதே,” என்றார். அதை இன்றும் நான் தொடர்கிறேன்.
ஆரம்பத்தில் ஐந்து ஆண்டுகள் இந்தியாவில் இருக்கலாம் என்று நினைத்தேன். தற்போது அந்த எண்ணம் மறைந்துவிட்டது. இப்போது அமெரிக்காவில் இருப்பதை விட, இந்தியாவில் இருக்கவே விரும்புகிறேன்.
அதேவேளையில், இங்கேயே இருந்து, 2030க்குள் 200 கிளைகள் திறக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். அடுத்த ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியில், என் நிறுவனம் பங்கு பெற வேண்டும் என்று விரும்புகிறேன்.
நான் பெங்களூரு வந்தபோது, இம்மண்ணின் மொழி, கலாசாரத்தை நேசிக்க துவங்கினேன். கொஞ்சமாக கன்னடம் பேச தெரியும்.
கர்நாடகாவுக்கு வருபவர்கள் யாராக இருந்தாலும், இம்மொழியையும், கலாசாரத்தையும் கற்றுக் கொள்ளுங்கள். அவர்கள் கன்னடத்தில் பேச வேண்டும்.
நான் பெங்களூரு வந்தபோது, மறைந்த நடிகர் அம்பரிசின் 60வது பிறந்த நாள். எங்கு பார்த்தாலும் அவரது போஸ்டர்கள் இருந்தன.
யார் இந்த மனிதர்? மக்கள் இவரை இவ்வளவு விரும்புகின்றனர் என்று தோன்றியது. பின், அம்பரிஷ், சுதீப் நடித்த 'வீர பரம்பரை' படத்தை பார்த்தேன். மிகவும் நன்றாக நடித்திருந்தார்.
இவ்வாறு கூறினார்.
� பர்ட் முல்லர். � கலிபோர்னியா பரிட்டோ ரெஸ்டாரென்ட்
- நமது நிருபர் -.

