/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
பெயருக்காக சேவை செய்யவில்லை...மன திருப்திக்காக செய்கிறேன்
/
பெயருக்காக சேவை செய்யவில்லை...மன திருப்திக்காக செய்கிறேன்
பெயருக்காக சேவை செய்யவில்லை...மன திருப்திக்காக செய்கிறேன்
பெயருக்காக சேவை செய்யவில்லை...மன திருப்திக்காக செய்கிறேன்
ADDED : ஜூலை 26, 2025 11:12 PM

குடும்பத்தினர் அல்லது சமூகத்தால் கைவிடப்பட்டோர், எந்தவிதமான ஆதரவும் இல்லாமல் தனிநபராக இருப்போர் ஆதரவற்றவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இத்தகையோருக்காக தொண்டு நிறுவனங்கள் நடத்தப்படுகின்றன. அரசு சார்பில் காப்பகமும், இல்லமும் உள்ளது.
சாலையில் சுற்றித்திரியும் ஆதரவற்ற யாராவது இறந்தால், அவர்களின் உடல்களை அடக்கம், தகனம் செய்ய பெரும்பாலும் யாரும் முன்வருவது இல்லை. அனாதை பிணம் என்று போலீசார் தகனம் அல்லது அடக்கம் செய்து விடுகின்றனர். ஆனால் பெண் ஒருவர் ஆதரவற்ற உடலை அடக்கம் செய்வதை சமூக பணியாக செய்கிறார்.
பெங்களூரு தெற்கு சென்னப்பட்டணாவை சேர்ந்தவர் ஆஷா. சமூக ஆர்வலர். ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்வதை தனது பணியாக வைத்து உள்ளார். சாலையில் இறந்து கிடக்கும் ஆதரவற்றோர், ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாமல் இறந்தோர் என பலரது உடல்களை அடக்கம் செய்து உள்ளார்.
இதுகுறித்து ஆஷா கூறியதாவது:
ஆதரவற்றோருக்கு செய்யும் பணி, கடவுளுக்கு செய்வது போன்று என்று நான் நம்புகிறேன். சாலையில் சுற்றித்திரியும் ஆதரவற்றோருக்கு உணவு, உடை வழங்கி என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன். 'ஜீவ ரக் ஷ' என்ற அறக்கட்டளையில் உறுப்பினராக உள்ளேன். அங்கு இருக்கும் அனைவரும் சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என்ற மனப்பான்மை கொண்டவர்கள்.
கொரோனா முதல், இரண்டாம் அலையின் போது, ஏராளமான உடல்களை தகனம் செய்து உள்ளேன். குடும்ப உறுப்பினர்கள் கூட கொரோனாவால் இறந்தோர் உடல்களை தகனம் செய்ய தயக்கம் காட்டினர். கெங்கேரியில் இருந்து மாண்டியா வரை, ரயில் அடிபட்டு இறந்த நபர்களின் உடல்களை, போலீசார் உதவியுடன் தகனம் செய்து உள்ளேன். எனது சேவைக்கு குடும்பத்தினர், உறவினர்கள், பொதுமக்களிடம் இருந்து ஆதரவு உள்ளது. பெயருக்காக இந்த சேவையை செய்யவில்லை; மன திருப்திக்காக செய்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -