/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
கர்நாடகாவின் உசைன் போல்ட் கம்பாலா வீரர் ஸ்வரூப்
/
கர்நாடகாவின் உசைன் போல்ட் கம்பாலா வீரர் ஸ்வரூப்
ADDED : ஜன 04, 2026 04:50 AM

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டாக இருப்பது போல, கர்நாடகாவில் கம்பாலா விளையாட்டு போட்டி உள்ளது. கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களில் பல அமைப்புகளின் சார்பில், ஆண்டிற்கு இரு முறை பல்வேறு இடங்களில், கம்பாலா விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
கடந்த, 2023ல் பெங்களூரில் முதல் முறையாக கம்பாலா போட்டி நடத்தப்பட்ட பின், இந்த போட்டிக்கான மவுசு அதிகரித்தது. நீர் நிரம்பிய வயலில், ஜோடி எருதுகளுடன், கம்பாலா வீரர்களும் ஓட வேண்டும். குறிப்பிட்ட துாரத்தை எந்த ஜோடி எருதுகள் முதலில் அடைகிறதோ, அந்த ஜோடி எருதுகளும், அதை ஓட்டிச் செல்லும் வீரரும் வெற்றியாளர் என்று அறிவிக்கப்படுகின்றனர்.
கடந்த, 2022ல் மங்களூரில் நடந்த கம்பாலா போட்டியில், 100 மீட்டர் துாரத் தை, 8.78 வினாடிகளில் கடந்து சீனிவாஸ் கவுடா என்ற கம்பாலா வீரர் சாதனை படைத்திருந்தார். இவரை பிரபல தடகள வீரர் உசேன் போல்டுடன் பலரும் ஒப்பிட்டனர். கர்நாடகாவின் உசேன் போல்ட் என, சீனிவாஸ் கவுடா அழைக்கப்பட்டு வந்தார்.
தற்போது இவரது சாதனையை ஸ்வரூப் என்ற கம்பாலா வீரர் முறியடித்துள்ளார். கடந்த வாரம் மங்களூரின் பங்காரா கூளூரில் நடந்த கம்பாலா போட்டியில், 100 மீட்டர் துா ரத்தை, 8.69 வினாடிகளில் தன் ஜோடி எருதுகளுடன் கடந்து ஸ்வரூப் சாதனை படைத்துள்ளார். இதன் வாயிலாக, கர்நாடகாவின் உசேன் போல்ட் என்ற பெயரை சீனிவாஸ் கவுடா விடமிருந்து தட்டி பறித்து உள்ளார்.
இதுகுறித்து ஸ்வரூப் கூறியதாவது:
கடந்த மூன்று ஆண்டுகளாக, கம்பாலா விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். முதலில் ஜூனியர் பிரிவு போட்டிகளில் பங்கேற்றேன். முதல்முறையாக சீனியர் பிரிவில் பங்கேற்றேன். இதில், 100 மீட்டர் துாரத்தை, 8.69 வினாடிகளில் கடந்து சாதனை படைத்துள்ளேன். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இந்த சாதனையை படைப்பேன் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.
வரும் நாட்களில் நிறைய போட்டிகளில் கலந்து கொள்ள ஆர்வ மாக உள்ளேன். கம் பாலா பாரம்பரிய விளையாட்டு. இது, எங்களின் உயிர் மூச்சும் கூட. எருதுகள் தான் எங்களின் நண்பர்கள். நாங்கள் சொல்வதைக் கேட்டு ஓடி, எங்களுக்கு பெயர் புகழை பெற்று தருகின்றன.
இவ்வாறு கூறினார்.
- நமது நிருபர் - -

