தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/பானுவாசர ஸ்பெஷல்/குறைந்த விலைக்கு உணவு வழங்கும் சிவபசப்பா

குறைந்த விலைக்கு உணவு வழங்கும் சிவபசப்பா

குறைந்த விலைக்கு உணவு வழங்கும் சிவபசப்பா


UPDATED : நவ 22, 2026 12:00 AM

ADDED : நவ 21, 2026 08:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 22, 2026 12:00 AM ADDED : நவ 21, 2026 08:38 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -: இன்றைய காலத்தில், ஒரு சாதாண உணவகத்துக்கு சென்று, வயிறு நிரம்ப உணவு சாப்பிட வேண்டுமானால், குறைந்தபட்சம் 100 ரூபாய் தேவைப்படும். பாக்கெட்டில், 100 ரூபாய் இல்லாவிட்டால், உணவகத்துக்கு செல்ல முடியாது. ஆனால் சில ஹோட்டல்கள், இன்றைக்கும் குறைந்த விலைக்கு தரமான உணவு வழங்குகின்றன. இவற்றில் ராமேஸ்வரா ஹோட்டலும் ஒன்றாகும்.

பாகல்கோட் மாவட்டம், ஜமகன்டி தாலுகாவின், ஹுன்னுாரா கிராமத்தில் வசிப்பவர் சிவபசப்பா கக்கேவாடி. இவர் கடந்த 35 ஆண்டுகளாக, ஸ்ரீ ராமசந்திரா என்ற பெயரில் ஹோட்டல் நடத்துகிறார். இவரது ஹோட்டலில் பூரி, கிழங்கு, இட்லி, சாம்பார், உப்புமா, பஜ்ஜி கிடைக்கும். இதில் எதை சாப்பிட்டாலும், வெறும், 12 ரூபாய் மட்டுமே.

விலை குறைவு என்பதால், சுவையாக, தரமாக இருக்காது என, நினைத்தால் அது தவறு. உணவின் சுவை நாவை விட்டு அகலாது. அந்த அளவுக்கு உணவு, சுவையாக இருக்கும். உணவு பொருட்கள், தானியங்கள், மசாலா பொருட்களின் விலை உயர்ந்தாலும், இவர் குறைந்த விலைக்கு உணவு வழங்குகிறார். சுவையாகவும், தரமாகவும் இருப்பதால் வாடிக்கையாளர் கூட்டம், நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

விலையை உயர்த்த காரணம் தேடும், ஹோட்டல்களுக்கு இடையே, இப்போதும் கைக்கு எட்டும் விலையில் உணவு வழங்கும் சிவபசப்பா, மற்றவர்களுக்கு முன் மாதிரியாக திகழ்கிறார்.

அவர் கூறியதாவது:

கடந்த, 35 ஆண்டுகளாக, நான் ஹோட்டல் நடத்துகிறேன், எங்களிடம் பூரி, இட்லி, உப்புமா, பஜ்ஜி கிடைக்கும். ஆரம்பத்தில் மூன்று ரூபாய்க்கு, சிற்றுண்டி வழங்கினோம். அதன்பின் ஆறு ரூபாயாக உயர்ந்தது.

இப்போது, 12 ரூபாயாக உயர்த்தியுள்ளோம். நாங்கள் பணியாட்கள் வைக்கவில்லை. நானும் என் மகன் மல்லப்பாவும் தான் ஹோட்டலை நடத்துகிறோம்.

இங்கு சாப்பிடுவதுடன், பலரும் பார்சல் கட்டி செல்கின்றனர். தினமும், 200க்கும் மேற்பட்டோர் பார்சல் வாங்கி செல்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us