sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

ஸ்பெஷல்

/

பானுவாசர ஸ்பெஷல்

/

 சுப நிகழ்ச்சிகளுக்கு திருமண மண்டபத்தை இலவசமாக வழங்கும் கோவில் அர்ச்சகர்

/

 சுப நிகழ்ச்சிகளுக்கு திருமண மண்டபத்தை இலவசமாக வழங்கும் கோவில் அர்ச்சகர்

 சுப நிகழ்ச்சிகளுக்கு திருமண மண்டபத்தை இலவசமாக வழங்கும் கோவில் அர்ச்சகர்

 சுப நிகழ்ச்சிகளுக்கு திருமண மண்டபத்தை இலவசமாக வழங்கும் கோவில் அர்ச்சகர்


ADDED : பிப் 22, 2026 05:19 AM

Google News

ADDED : பிப் 22, 2026 05:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர் -

பொதுவாக தங்களின் பிள்ளைகளுக்கு திருமணம் ஏற்பாடு செய்யும் பெற்றோர், கடன் வாங்கியாவது பெரிய மண்டபத்தில் திருமணத்தை நடத்தி பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவர். பண வசதி உள்ளவர்களுக்கு, இது பெரிய விஷயம் அல்ல. ஏழைகள், நடுத்தர குடும்பத்தினரால் அது முடியாது. இத்தகைய குடும்பத்தினருக்காக, மங்களூரில் இலவச மண்டபம் உள்ளது.

தட்சிணகன்னட மாவட்டம், மங்களூரு நகரின் தலப்பாடியின் தேவிபுராவில், ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி கோவில் உள்ளது.

கோவில் அருகே ஸ்ரீதுர்கா தியான மந்திர் என்ற பெயரில் திருமண மண்டபம் உள்ளது. திருமணம், நிச்சயதார்த்தம், குழந்தைகளின் பெயர் சூட்டு விழா உட்பட, சுப நிகழ்ச்சிகள் நடத்த, இந்த மண்டபம் இலவசமாக வழங்கப்படுகிறது.

தியான மந்திரில், உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளியூர்காரர்களும் நிகழ்ச்சி நடத்துகின்றனர்.

ஏழை, பணக்காரர் பாகுபாடு பார்ப்பதில்லை. எந்த சமுதாயத்தினரும் நிகழ்ச்சி நடத்தலாம். இங்கு சைவ உணவுக்கு மட்டுமே, அனுமதி உள்ளது. அசைவம் சாப்பிட அனுமதி இல்லை.

தேவிபுரா துர்கா பரமேஸ்வரி கோவிலின் தலைமை அர்ச்சகர் கணேஷ் பட், தன் சொந்த செலவில் இந்த தியான மண்டபத்தை கட்டியுள்ளார். கடன் வாங்கி மண்டபம் கட்டினார்.

கடன் அடைந்த பின், தியான மண்டபத்தை கோவிலுக்கு சமர்ப்பணம் செய்ய கணேஷ் பட் முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து, அர்ச்சகர் கணேஷ் பட் கூறியதாவது:

கிராமத்தில் உள்ள பெரியவர்கள், பொதுமக்களுக்காக இலவச திருமண மண்டபம் கட்ட வேண்டும் என்று, என்னிடம் கேட்டுக்கொண்டனர்.

இதைக்கட்ட வங்கியில் கடன் வாங்கினேன். கடனை முழுமையாக அடைத்த பின், கோவிலுக்கு அர்ப்பணிப்பேன்.

கடந்த, 2023ல் திருமண மண்டபம் கட்டப்பட்டது. எந்த நி கழ்ச்சிகள் என்றாலும், இலவசமாக நடத்தலாம். திருமணம், பூணுால் மாற்றுவது உட்பட, சுப நிகழ்ச்சிகள், திதி நிகழ்ச்சிகள் இங்கு நடந்துள்ளன.

திருமணத்துக்கு வருவோருக்கு, தங்கும் வசதியும் உள்ளது. மணமக்களுக்கு சிறப்பு இருக்கைகளும், நிகழ்ச்சிக்கு வருவோருக்கு, 600 இருக்கைகளும் உள்ளன,

மணமக்கள் டிரெஸ்ஸிங் ரூம், மின் விசிறிகள், உணவு ஹால், இரண்டு தனி அறைகள், சமையல் அறை, 400 பேர் அமர்ந்து உணவருந்தும் டைனிங்ஹால் உள்ளன. சமையல் பாத்திரங்களும் உள்ளன. இவற்றை நிகழ்ச்சி நடத்துவோர் இலவசமாக பயன்படுத்தலாம்.

நி கழ்ச்சிகளில் ஜெனரேட்டர் பயன்படுத்தினால், மண்டபத்தை துப்புரவு செய்யவும், 4,000 ரூபாய் செலுத்த வேண்டும். ஏழைகளுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்ற நோக்கில், மண்டபத்தை கட்டினேன். வரும் நாட்களிலும் இலவசமாகவே பயன்படுத்தலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us