/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர்
/
பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர்
பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர்
பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர்
ADDED : மார் 30, 2025 03:55 AM

பொதுவாக பெற்றோர் தங்கள் குழந்தைகளை கோடைக்காலங்களில் நீச்சல் பயிற்சியில் சேர்த்து விடுவர். எனவே, கோடை சீசனில் நீச்சல் குளங்களில் பயிற்சி பெறுவோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பது வழக்கம்.
ஆனால், வழக்கத்திற்கு மாறாக கே.எஸ்.ஏ., எனும் கர்நாடகா ஸ்விம்மிங் சங்கத்தின் கீழ் இயங்கும் நீச்சல் குளங்களில் பயிற்சி பெறுவோரின் எண்ணிக்கை மிக மிக அதிகமாக இருக்கிறது.
இதற்கான காரணம் என்னவென்று கே.எஸ்.ஏ., செயலர் எம்.சதிஷ்குமாரிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு, அவர் சொன்ன பதில், அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
அவரது பதில்: ஆம். நீங்கள் சொன்னது உண்மை தான். இம்முறை நீச்சல் பெறுவோரின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமகாவே உள்ளது. இதற்கு காரணம், நீச்சல் கற்றுத்தருவதற்காக உலக புகழ் பெற்ற நீச்சல் பயிற்சியாளர் அல்டிபா வேட் வந்து உள்ளார், என்றார்.
இதை கேட்டு ஆச்சரியமடைந்து, யார் இந்த அல்டிபா வேட், ஏன் அவரிடம் பயிற்சி பெறுவதற்கு இவ்வளவு கூட்டம் என தங்கள் மனதில் எழுந்த கேள்விகளுக்கு விடை தருகிறது இக்கட்டுரை.
பயிற்சியாளர்
பார்ப்பதற்கு மொட்டை தலையுடன், கட்டு மஸ்தான உடம்புடன் பல நாடுகளுக்கு சென்று நீச்சல் பயிற்சி அளிப்பார் இந்த அல்டிபா வேட், 47. அமெரிக்கா, புளோரிடாவை சேர்ந்தவர். இவர் புதிதாக வருவோருக்கு நீச்சல் கற்றுத்தருபவர் மட்டும் இல்லை; நீச்சல் கற்றுத்தரும் பயிற்சியாளர்களுக்கே, பயிற்சி அளிப்பவர்.
இவர் பல நாடுகளில் பயிற்சி அளித்து வருகிறார். இது மட்டுமின்றி, ஹாலிவுட் படங்களில் 'டூப்' வேஷம் போட்டு நடித்து உள்ளார். நீச்சல் போட்டிகளில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு கூட பயிற்சி அளித்துள்ளாராம்.
இப்போது புரிகிறதா... இவரிடம் பயிற்சி பெறுவதற்கு ஏன் கூட்டம் வருகிறது என்று. ஆரம்ப நிலையில் உள்ள நீச்சல் கற்கும் கர்நாடகாவை சேர்ந்த மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருகிறார்.
பொன்மொழிகள்
அவரிடம் இருந்து சில வார்த்தைகள்:
மாணவர்கள் எதிர்காலத்தில் பெரிய நீச்சல் வீரராக மாறுவதற்கு பெற்றோர் அளிக்கும் ஊக்கமும், உந்துதலும் முக்கியமான ஒன்றாகும். நீச்சல் போட்டிகள் பற்றிய விழிப்பணர்வு பெற்றோரிடம் வர வேண்டும். அப்போது, தான் அவர்கள் தங்கள் பிள்ளைகளை நீச்சல் குளங்கள் நோக்கி அழைத்து வருவர்.
நீச்சல் வீரருக்கும், பயிற்சியாளருக்கும் இடையேயான தொடர்பு என்பது மிக முக்கியமான ஒன்று. நீச்சல் வீரர் என்பவர் விதையாகவும், பயிற்சியாளர் என்பவர் தோட்டமாகவும் இருக்க வேண்டும்.
நான், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற நீச்சல் வீரர்களுக்கு பயிற்சி அளித்து உள்ளேன். நீச்சல் விளையாட்டு போட்டிகளில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. இந்தியாவில் விளையாட்டு துறைக்கு அதிக முக்கயத்துவம் அளிக்கப்படுவது சிறப்பு.
உணவே மருந்து
பயிற்சியின் போது புதியவர்கள் உணவு விஷயத்தில் செய்யும் தவறுகள், வயிற்றுவலியை உண்டாக்கும்.
ஒரு நீச்சல் வீரர் உணவு விஷயத்தில் மிகுந்த கட்டுப்பாடுடன் இருப்பார். எந்த தீய விஷயங்களுக்கும் ஈடுபட மாட்டார். எனவே, பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என நினைத்தால், நீச்சல் பயிற்சியில் தங்கள் குழந்தைகளை சேர்க்கவும்.
- நமது நிருபர் -