ஷாம்பு மற்றும் கண்டிஷனர் வித்தியாசம்: எப்படி, யார் பயன்படுத்தலாம்!
ஷாம்பு மற்றும் கண்டிஷனர் வித்தியாசம்: எப்படி, யார் பயன்படுத்தலாம்!
UPDATED : ஜூன் 28, 2023 05:24 PM
ADDED : ஜூன் 28, 2023 05:17 PM

ஷாம்பு ஒரு சுத்தப்படுத்தும் பொருள். அதில் உள்ள சர்ஃபக்ட்டன்டுகள் மற்றும் டிடர்ஜென்டுகள் உங்கள் தலைமுடியில் இருந்து எண்ணெய், வியர்வை, அழுக்கு, பொடுகு ஆகியவற்றை அகற்ற உதவும்.
கண்டிஷனர் தலைமுடியை மென்மையாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. கண்டிஷனரில் பொதுவாக இயற்கை எண்ணெய்கள், புரதங்கள் மற்றும் தாவரச் சாறுகள் இருக்கும். இதனை தேய்க்கும் போது மெல்லிய படலத்தை உருவாக்கி தலைமுடியைப் பாதுகாக்கும்.
ஷாம்பு மற்றும் கண்டிஷனரை எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஷாம்பு போட்டு தலையில் இருக்கும் அழுக்குகளை நீக்க வேண்டும்.
தலைமுடியை வெதுவெதுப்பான (கொதிக்க வைத்த தண்ணீர் இல்லை) நீரில் நனைத்துக் கொள்ளவும்.
உள்ளங்கையில் சிறிதளவு ஷாம்பு எடுத்துக்கொண்டால் போதும்.
அதை உங்கள் உச்சந்தலையில் தடவி, நுரை வரும் வரை மசாஜ் செய்யவும்.
தோலில் அதிகம் படாமல் முடியில் மட்டும் ஷாம்பு படரும் படி மசாஜ் செய்யுங்கள்.
பின்னர் ஷாம்பு நுரையை அலசிவிட்டு கண்டிஷனரை முடியில் தடவி 3 நிமிடம் ஊறவிட்டு கழுவிக்கொள்ளுங்கள். பின்னர் ஈரம் போக துண்டால் மென்மையாக துடைத்துவிடுங்கள்.
எத்தனை முறை பயன்படுத்த வேண்டும்!
![]() |
கண்டிஷனர் பயன்படுத்துகையில் அதில் சிலிக்கான் இல்லை என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். சைக்ளோமெதிகோன், டைமெதிகோன் மற்றும் அமோடிமெதிகோன் போன்ற பொருட்களைக் கொண்ட தயாரிப்புகளைத் தவிர்க்கவும். இவை தான் பொதுவாக பயன்படுத்தப்படும் சிலிக்கான்கள். இது கூந்தலை எடை மிகுந்ததாகவும், வறண்டதாகவும் மாற்றும்.

