தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/அழகு/'விங் லுக்' பெறும் உங்கள் கண்: உதவுகிறது இந்த ஸ்டாம்ப் பென்

'விங் லுக்' பெறும் உங்கள் கண்: உதவுகிறது இந்த ஸ்டாம்ப் பென்

'விங் லுக்' பெறும் உங்கள் கண்: உதவுகிறது இந்த ஸ்டாம்ப் பென்


UPDATED : அக் 04, 2026 09:56 AM

ADDED : அக் 03, 2026 02:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 04, 2026 09:56 AM ADDED : அக் 03, 2026 02:56 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெண்கள் கண்களை மேலும் எடுப்பாகவும், அழகாகவும் காட்ட ஐ-லைனரை பயன்படுத்துவது வழக்கம்.

தற்போது பேஷன் பிரியர்களின் கவனத்தை ஈர்த்து வருவது, 'ஐ-லைனர் ஸ்டாம்ப் பென்' என்கிறார் அழகுக்கலை நிபுணர் ஹேமா.

கண்களில் நேர்த்தியாக ஐ-லைனர் போட தெரியாமல் தடுமாறுபவர்களுக்கும், இரு கண்களிலும் ஒரே மாதிரியான 'விங்' லுக் வரவில்லை என கவலைப்படுபவர்களுக்கும், இந்த ஸ்டாம்ப் பென் பயனுள்ளதாக இருக்கும்.

மிகவும் எளிதாக, சில விநாடிகளிலேயே கச்சிதமான 'விங்' லுக்கை பெற இந்த ஸ்டாம்ப் பென் உதவுகிறது.

எப்படி பயன்படுத்துவது?



முதலில், கண் இமைகளில் எண்ணெய் பிசுக்கு இல்லாமல் சுத்தமாக துடைத்த பின், சிறிதளவு பவுடர் அல்லது ஐ-ஷேடோ பிரைமர் தடவிக்கொள்ளலாம்.

ஸ்டாம்ப் பென் முனையில் முக்கோண வடிவிலான 'ஸ்டாம்ப்' இருக்கும். அதை கண்ணின் வெளிப்புற முனையில் வைத்து லேசாக அழுத்தினால், 'விங்' வடிவம் கிடைத்துவிடும்.

பேனாவின் மறுமுனையில் உள்ள சாதாரண ஐ-லைனர் டிப் பயன்படுத்தி, கண்ணின் உட்புற முனையில் இருந்து ஸ்டாம்ப் போட்ட கோட்டுடன் இணைத்து, மெலிதாக கோடு வரைய வேண்டும்.

இரு கண்களிலும் ஒரே கோணத்தில் ஸ்டாம்ப் பதிந்துள்ளதா என்பதை உறுதி செய்து, தேவையெனில் லேசாக, 'டச்- அப்' செய்து கொள்ளலாம்.

ஸ்டாம்ப் பென்னை வாங்கும்போது, அது 'ஸ்மட்ஜ் ப்ரூப்' மற்றும் 'வாட்டர் ப்ரூப்' தன்மை கொண்டதா என்பதை பார்த்து வாங்குவது அவசியம்.

அவசரமாக கிளம்புபவர்களுக்கு நேரத்தை மிச்சப்படுத்துவதுடன், கச்சிதமான 'விங்' லுக்கையும் தருவதால், இந்த சீசனின் முக்கிய அழகு சாதன பொருட்களில் ஒன்றாக இது மாறியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us