/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
அழகு
/
காஜலை 'ஸ்மஜ்' செய்தால் 'செட்' செய்ய மறக்காதீர்கள்
/
காஜலை 'ஸ்மஜ்' செய்தால் 'செட்' செய்ய மறக்காதீர்கள்
காஜலை 'ஸ்மஜ்' செய்தால் 'செட்' செய்ய மறக்காதீர்கள்
காஜலை 'ஸ்மஜ்' செய்தால் 'செட்' செய்ய மறக்காதீர்கள்
UPDATED : டிச 15, 2025 11:52 AM
ADDED : டிச 14, 2025 07:52 AM

க ண் இமைகளுக்கு அழகு சேர்க்க பயன்படுத்தும் கண் மை (காஜல்), சில மணி நேரங்களிலேயே கண்களை சுற்றி கசிந்து கருப்படிந்து, பார்ப்பதற்கு எடுப்பில்லாத தோற்றத்தைத் தருகிறதா?
பயன்படுத்தும் முறையில் இருக்கிறது மேட்டர் என்கிறார், அழகுக்கலை நிபுணர் ரம்யா.
“பொதுவாக, காஜல் போடும் போது, கீழ் இமையில் அப்ளை செய்வதை தவிர்க்க வேண்டும். கீழ் கண்ணிமையில் காஜல் போடுவது, கண்களை சுருக்கியது போலவும், சிறியதாகவும், பொலிவு இல்லாமலும் காட்டும். காஜல் விரைவில் கசியவும் இதுவே முக்கிய காரணம்.
காஜலை ஸ்மஜ் செய்து வித்தியாசமான தோற்றத்தை விரும்பினால், அதை சரியாக 'செட்' செய்ய மறக்கவே கூடாது. ஸ்மஜ் செய்த பிறகு, அதே நிறத்தில் உள்ள, ஐ ஷேடோ அல்லது செட்டிங் பவுடரையோ லேசாக தொட்டு பூசினால், காஜல் கண்களில் கசியாமல், நாள் முழுவதும் பிரெஷ்ஷாக இருக்கும்.
காஜல் மட்டும் போதாது
அதேபோல், கண்களுக்கு வெறும் காஜல் மட்டும் போதாது. முகத்தின் அழகை முழுமைப்படுத்துவதில் புருவங்களின் வடிவமைப்புக்கும், முக்கியப் பங்கு உண்டு. புருவங்களை சரியாக வடிவமைத்து, அதற்கென உள்ள பென்சிலால் லேசாக பில் செய்தால், முகத்துக்கு ஒரு அழகான வடிவு தரும்.
மேல் இமையில் காஜலை மெலிதாக 'அப்ளை' செய்து பாருங்கள். இதனால் கண்கள் பார்ப்பதற்கு மேலும் எடுப்பாகவும், கவர்ச்சியாகவும் தெரியும்.
மஸ்காரா பயன்படுத்தும் போது, இமைகளில் கீழ்வாக்கில் போடாமல், மேல்வாக்கில் 'ஷார்ப்'பாக இழுத்து போடுவது சிறந்தது. இது கண்களுக்கு தனிப்பட்ட பொலிவை கொடுத்து, முகம் முழுவதும் வசீகரமாகத் தோன்ற உதவும்.

