sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/அழகு/கருவளையத்தை போக்கும் இயற்கை எண்ணெய்கள்

கருவளையத்தை போக்கும் இயற்கை எண்ணெய்கள்

கருவளையத்தை போக்கும் இயற்கை எண்ணெய்கள்


UPDATED : ஆக 22, 2022 01:33 PM

ADDED : ஆக 22, 2022 01:29 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 22, 2022 01:33 PM ADDED : ஆக 22, 2022 01:29 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆண், பெண் இருவருக்கும், முக அழகை கெடுக்கும் விதமாக ஏற்படும் பிரச்னை கருவளையம். அதிக வேலை நேரம், தூக்கமின்மை, வயது, பிக்மென்டேஷன், கவலை என பல காரணங்களால் இவை ஏற்படுகின்றன. கண்களை சோர்வடையச் செய்யும் கருவளையங்கள், நாளடைவில் முகத்தையும் பொலிவிழக்கச்செய்து, முதுமைத் தோற்றத்தை தரக்கூடும்.

இந்த கருவளையத்தை கவனிக்காமல் விட்டுவிட்டால், அவை கண்கள் கீழே, பைகளை கூட உண்டாக்க கூடும். மேலும் கண்களைச் சுற்றி ஒருமுறை கருவளையம் வந்துவிட்டால் அவை மீண்டும் மீண்டும் வரக்கூடும். அதை சரி செய்ய சில இயற்கை எண்ணெய்கள் உதவும். அவற்றை பற்றி இப்போது பார்ப்போம்.

தேங்காய் எண்ணெய்:


Image 985907


சருமப் பொலிவை பாதுகாப்பதில் எப்போதும் முக்கிய பங்கு வகிப்பது தேங்காய் எண்ணெய். இதில் அதிக அளவில் 'வைட்டமின் ஈ, மற்றும் கே' சத்துகள் உள்ளன. இவை கண்களுக்கு கீழ் உள்ள தோலில் ஏற்பட்ட பாதிப்பை விரைவில் குணப்படுத்தும். சுத்தமான தேங்காய் எண்ணெயை பஞ்சில் தொட்டு கண்ணுக்கு அடியில் மசாஜ் செய்து வந்தால் நாளடைவில் கண் கருவளையம் மறையும்.

பாதாம் எண்ணெய் :


Image 985906


பாதாம் எண்ணெயை கண்களைச் சுற்றி தேய்பதன் மூலம் கண்களுக்கு நல்ல ஓய்வும், கருவளையம் விரைவில் மறையும். இந்த எண்ணெயை கண்களுக்கு கீழ் நரம்புகள் பலம் பெரும் வகையில், மிருதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இது கண்களை சுற்றியுள்ள மென்மையான சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கும். கண்களுக்கு கீழ் இருக்கும் இரைப்பை வீக்கத்தை சரி செய்யும். கருவளையத்தை குறைக்க உதவும்.

பெருஞ்சீரகம் எண்ணெய் :


Image 985910


அழகியல் பயன்பாட்டிற்காக பெருஞ்சீரகம் விதை எண்ணெய்கள் பண்டைய ரோமில் உயோகிக்கப்பட்டதாக சான்றுகள் உண்டு. இவற்றில் ஆண்டிசெப்டிக் பண்புகள் உள்ளன. இவை கண்களை சுற்றியுள்ள கருவளையங்களை நீக்குவதுடன், அங்கு காணப்படும், சுருக்கங்களை குறைக்கும். கண்களை சுற்றி இந்த எண்ணெயை தடவி சுமார் 15 நிமிடங்கள் ஊறவைத்து கழுவ வேண்டும். நல்ல மாற்றம் ஏற்படும்.

யூகலிப்டஸ் எண்ணெய் :


Image 985908
சளிக்கு மட்டுமல்ல, கருவளையத்தையும் போக்கும் தன்மை கொண்டது யூகலிப்டஸ் எண்ணெய். இவை பயன்படுத்துவதால், கண்களுக்கு கீழ் ரத்த ஓட்டம் சீராகி, திட்டுகள் உருவாகுவதை தடுக்கும். இவற்றை நேரடியாக பயன்படுத்தக்கக் கூடாது. தேங்காய் எண்ணெயில் இரண்டு சோட்டுகள் போட்டு, அதன்பின் கண்களுக்கு கீழ் தடவவும். இல்லை எனில், அதிக எரிச்சலை உண்டாக்கும்.

ஆலிவ் எண்ணெய்:


Image 985909


ஆலிவ் எண்ணெயில் வைட்டமின் ஏ, டி, இ, கே என பல சத்துகள் உள்ளன. இவை சருமத்தின் ஈரப்பதத்தை மேம்படுத்தி அதை ஊட்டமாக வைத்திருக்க உதவும். இதை வட்ட இயக்கங்களில் 2 முதல் 3 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும். குறிப்பாக இரவு நேரங்களில் இந்த எண்ணெயை தடவி விரவும். கருவளையம் மறையும் வரை இதை தினமும் செய்து வரலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us