முகப்பருக்களுக்கு குட் பை சொல்லணுமா ? இத ட்ரை பண்ணுங்க....
முகப்பருக்களுக்கு குட் பை சொல்லணுமா ? இத ட்ரை பண்ணுங்க....
UPDATED : மார் 13, 2023 06:09 PM
ADDED : மார் 13, 2023 06:07 PM

என்னதான் அழகை கச்சிதமாக பராமரித்தாலும், முகப்பருக்கள் வந்துவிட்டாலே தொல்லைதான். உடல் சூடு, மரபணு மாற்றம், அதிக எண்ணெய் தன்மையுள்ள சருமம், மாசுகள், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் சில உணவுப் பொருட்களாலும் முகப்பருக்கள் வரக்கூடும். இவற்றுடன் கூடவே வலி, தழும்பு, கரும்புள்ளிகள் போன்றவையும் வந்து உங்களை வதைக்கும். இதற்காக கவலை வேண்டாம். வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய தீர்வுகளையும், சில லைஃப்ஸ்டைல் மாற்றங்களையும் கடைப்பிடித்தாலே போதும், முகப்பருக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். உங்கள் முகப்பருக்களை போக்க சில டிப்ஸ் இதோ.....
ஒரு துண்டு உருளைக்கிழங்கை முகத்தில் தேய்க்கலாம் அல்லது அதை அரைத்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். 2 நாட்களுக்கு ஒரு முறை என வாரத்துக்கு செய்துவர, பருக்கள் குறைந்து தழும்புகள் மறையும்.
முகப்பரு, கரும்புள்ளிகள் மறைய மஞ்சள் தூளில் புதினா இலைச்சாறை கலந்து பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் மீது தடவ வேண்டும். இதை தினமும் காலை, மாலை என இரண்டு வேலைகளில் தடவலாம். 5 நிமிடத்துக்கு பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவலாம்.
![]() |
அதிக முகப்பருக்கள் உள்ளவர்கள் வேப்பங்கொழுந்து இலைகளை நன்கு மசித்து, மஞ்சள் தூள் சிறிது சேர்த்து (மிக வறட்சியாக இருந்தால் 2 சொட்டு கற்றாழை ஜெல் சேர்த்துக் கொள்ளவும்), அந்த பேஸ்டை பருக்கள் மீது பூசவும். 20 நிமிடத்துக்கு பின்னர் குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவவும். ஒரு வாரம் இதை செய்துவர, பருக்கள் குறைந்து கரும்புள்ளிகள் குணமாக ஆரம்பிக்கும்.
முகப்பருக்களை தடுக்க....
முகப்பருக்களை கட்டுப்படுத்த ஃப்ரிட்ஜில் வைத்து சூடு செய்த உணவு, எண்ணெய் பலகாரங்கள், வறுத்த உணவுகளை குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
உடல் சூட்டை தணியுங்கள். அதற்கு அடிக்கடி தண்ணீர் அருந்தி உடலின் நீர்ச்சத்தை பராமரியுங்கள்.
![]() |
உங்கள் ஸ்கின் டைப் எது என்பதை நன்கு தெரிந்து கொண்டு, அதற்கு தகுந்த ஸ்கின் ப்ராடக்ட்ஸை பயன்படுத்துங்கள்.
தலைமுடியை சரியாக பராமரிக்கவில்லை என்றாலும் முகப்பருக்கள் வரும். அதனால் உங்கள் கூந்தலையும் கவனியுங்கள்.


