தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/உணவு/ காளான் தேங்காய் பால் கிரேவி

 காளான் தேங்காய் பால் கிரேவி

 காளான் தேங்காய் பால் கிரேவி


UPDATED : ஜூன் 11, 2026 08:03 AM

ADDED : ஜூன் 07, 2026 09:26 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 11, 2026 08:03 AM ADDED : ஜூன் 07, 2026 09:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவையான பொருட்கள்:

1 பாக்கெட் பட்டன் காளான் மல்லி இலை 1 கப் தேங்காய் பால், சாம்பார் வெங்காயம் 1 பெரிய வெங்காயம் 2 பச்சை மிளகாய் 1 தக்காளி 1 டேபிள் ஸ்பூன் நெய் 1 டேபிள் ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், மசாலாத்தூள் தேவையான அளவு உப்பு கசூரிமேத்தி

செய்முறை:

காளானை கழுவி நறுக்கி வைத்துக் கொள்ளவும். சாம்பார் வெங்காயம்,பெரிய வெங்காயம்,தக்காளியை நறுக்கி வைத்துக் கொள்ளவும். கடாயை ஸ்டவ்வில் வைத்து சூடானதும், எண்ணெய் சேர்த்து சூடானதும், வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலையை சேர்த்து வதக்கி, பின் குழம்பு மிளகாய் தூள்,மஞ்சள் தூள் எல்லாம் சேர்த்து நன்கு வதக்கவும். தேங்காய் துருவல்,கொஞ்சம் மிதமான சூட்டில் உள்ள தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.

சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை,வெங்காயம் சேர்த்து வதக்கவும். கால் ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள், கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பின்னர் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வதக்கவும். அதன் பின் நறுக்கி வைத்துள்ள காளானை சேர்த்து கலந்து விடவும்.

பின்னர் தயாராக வைத்துள்ள தேங்காய் பால் சேர்த்து நன்கு விடவும். ஐந்து நிமிடங்கள் மிதமான சூட்டில் வேக வைத்து அத்துடன் உப்பு,அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து நன்கு கலந்து, மேலும் ஐந்து நிமிடத்திற்கு வேக விடவும். கடைசியாக கரம் மசாலாத்தூள், மல்லி இலை, கசூரிமேத்தி சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான காளான் தேங்காய் பால் கிரேவி தயார். பின்னர் எடுத்து ஒரு பவுலில் சேர்க்கவும். இப்போது சுவையான சத்தான காளான் தேங்காய் பால் கிரேவி சுவைக்கத்தயார். இந்த கிரேவி சப்பாத்தி, ரொட்டி, பரோட்டா போன்ற எல்லா உணவுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us