/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
அழகு
/
பல நாள் வேண்டாமே 'பளபள' நகங்கள்...!
/
பல நாள் வேண்டாமே 'பளபள' நகங்கள்...!
ADDED : நவ 09, 2025 12:32 AM

இ ன்றைய பேஷன் உலகில், ஹேண்ட்பேக், செருப்புக்கு மேட்சாக நெயில் பாலிஷ் போடுவதுதான் லேட்டஸ்ட் டிரெண்ட்!
நெயில் பாலிஷ், பெண்களின் அன்றாட அழகுக் கலையில் அத்தியாவசியப் பொருளாகிவிட்டது. ஆனால், இந்த கலர்புல் ஜாலங்களுக்கு பின்னால் சில கவனிக்க வேண்டிய விஷயங்களும் இருப்பதாக சுட்டிக்காட்டுகிறார், அழகு கலை நிபுணர் ரம்யா.
3 ப்ரீ அல்லது 5 ப்ரீ? முதலில், நெயில் பாலிஷ் வாங்கும் போது, அதன் லேபிளை சரிபார்க்கவும். அதில் '3-ப்ரீ' அல்லது '5-ப்ரீ' என்று குறிப்பிடப்பட்டுள்ளதா எனப் பாருங்கள். இதன் அர்த்தம், பார்மால்டிஹைட், டோலுன் போன்ற தீங்கு விளைவிக்கும் முக்கிய ரசாயனங்கள் இதில் இல்லை அல்லது மிகக் குறைவாக உள்ளன என்பதாகும். இது நகங்களுக்கும், நம் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
நாள் வேண்டாமே... நெயில் ஆர்ட் உலகில், இப்போது சூப்பர் ஸ்டாராக இருப்பது, 'ஜெல் நெயில் பாலிஷ்' தான். பார்க்க பளபளப்பாகவும், நீண்ட நாட்கள் நீடித்தும் இருப்பதால், பலரும் இதை விரும்புகிறார்கள். ஆனால், ஜெல் பாலிஷ்களை அடிக்கடி பயன்படுத்துவதை, தயவுசெய்து தவிர்த்து விடுங்கள். எப்போதாவது விசேஷங்களுக்கு பயன்படுத்தினால் போதும்.
அழகாக இருக்கிறது என்பதற்காக, நெயில் பாலிஷை வாரக்கணக்கில் நகத்திலேயே வைத்திருக்காதீர்கள். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் நெயில் பாலிஷை, ரிமூவ் செய்துவிட வேண்டும்.
இது நகங்கள் சுவாசிக்கவும், அதன் இயற்கையான தன்மையை தக்க வைத்துக் கொள்ளவும் உதவும்.

