/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
பேஷன்
/
விமான பணிப்பெண்களின் யூனிபார்மை மாற்றும் ஏர் இந்தியா..!
/
விமான பணிப்பெண்களின் யூனிபார்மை மாற்றும் ஏர் இந்தியா..!
விமான பணிப்பெண்களின் யூனிபார்மை மாற்றும் ஏர் இந்தியா..!
விமான பணிப்பெண்களின் யூனிபார்மை மாற்றும் ஏர் இந்தியா..!
UPDATED : செப் 26, 2023 07:00 PM
ADDED : செப் 26, 2023 06:56 PM

60 ஆண்டுகளுக்கு பிறகு, ஏர் இந்தியா நிறுவனம், தனது விமான பணிப்பெண்களுக்கு சேலைக்கு பதிலாக சுடிதாரை புதிய யூனிபார்மாக மாற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த 2022ல் ஏர் இந்தியாவை கைப்பற்றிய டாடா குழுமம், அதனை விஸ்தாரா
நிறுவனத்துடன் இணைத்தது. தொடர்ந்து பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, ஏர்
இந்தியா நிறுவனம், பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. 1962ம் ஆண்டு ஜே.ஆர்.டி
டாடாவின் யோசனையில், வழக்கமான யூனிபார்முக்கு மாற்றாக சேலைகள்
அறிமுகப்படுத்தப்பட்டன. குறிப்பாக, அவை பின்னி மில்லில் இருந்து தயாராகின.
தற்போது வரை, ஏர் இந்தியாவில் பணியாற்றும் விமானப்பணி பெண்களின் யூனிபார்ம்,
அடர் சிவப்பு, நீலம் மற்றும் தங்க நிறத்திலான சேலை, தனித்துவமிக்க ஆடை அடையாளமாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில், நவீன காலத்திற்கு ஏற்ப, தற்போதைய புதிய யூனிபார்மை பிரபல ஆடை வடிவமைப்பாளர் மணீஷ் மல்ஹோத்ரா வடிவமைத்துள்ளார்.
![]() |
ஏர் இந்தியா விமான நிறுவன அதிகாரிகள் கூறுகையில்,
'விமான பணிப்பெண்களுக்கு சுடிதாரும், ஆண்களுக்கு சூட்டும் சீருடையாக மாற்றப்பட
அதிக வாய்ப்புள்ளது. இருப்பினும், முழுவதுமாக சேலை நீக்கப்படாதென தெரிகிறது.
விமான நிறுவனத்திற்கு பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. உடனடியாக
அணியக்கூடிய சேலை உள்ளிட்டவை இதில் உள்ளன. இருப்பினும், பாரம்பரிய சேலை
போன்று தோற்றமளிக்காது. நிர்வாகம் தரப்பில் தற்போது வரை யூனிபார்ம் இறுதி
செய்யப்படவில்லை'
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஏர் இந்தியா நிறுவனத்தின் சி.இ.ஓ கேம்ப்வெல் வில்சன் கூறுகையில், 'ஏர் இந்தியாவின்
புதிய தோற்றம், புதிய ஏர்பஸ் ஏ350 வருகைக்கு பின்னர் இருக்கும். அது வரும்
அக்டோபர் அல்லது நவம்பரில் நிகழுமென எதிர்பார்க்கப்படுகிறது.' என்றார்.
ஏர் இந்தியா விமான பணியாளர்களின் யூனிபார்ம் மாற்றம் குறித்து ஏர் இந்தியா சார்பில் இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


