தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/பேஷன்/பூட் கட் ஜீன்ஸ்... வரவேற்கிறது கேம்பஸ்!

பூட் கட் ஜீன்ஸ்... வரவேற்கிறது கேம்பஸ்!

பூட் கட் ஜீன்ஸ்... வரவேற்கிறது கேம்பஸ்!


UPDATED : ஆக 30, 2026 07:55 AM

ADDED : ஆக 29, 2026 02:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 30, 2026 07:55 AM ADDED : ஆக 29, 2026 02:20 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வின்டேஜ் பேஷன் எப்போதுமே ஒரு ரவுண்ட் அடிக்கும் பழைய ஸ்டைல்கள், புதுப்பொலிவுடன் மறு என்ட்ரி கொடுப்பது வழக்கம்.

அந்த வகையில், ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த பூட் கட் ஜீன்ஸ் மீண்டும் கல்லூரி கேம்பஸ்களை கலக்கி வருகிறது.

அதேபோல், உடலுடன் இறுக்கமாக ஒட்டாமல், கொஞ்சம் லூசான பிட்டில் இருக்கும் கொரியன் பிட் பேன்ட்ஸ்க்கும் இளம் தலைமுறையினர் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது.

லூசான டீ-ஷர்ட் அல்லது கேஷுவல் சர்ட்டுடன் கொரியன் பிட் பேன்ட்ஸ் போட்டால், சிம்பிளாக இருந்தாலும் ஸ்டைலிஷ் லுக் கிடைக்கும். ஸ்னீக்கர்ஸ் அல்லது கேஷுவல் ஷூஸ் சேர்த்துவிட்டால், கேம்பஸ் ரெடி லுக் கியாரன்டி!

கேஷுவல் மட்டுமல்ல...

இதுவரை கேஷுவல் உடைகளுக்கு மட்டுமே பொருத்தமாக பார்க்கப்பட்ட இந்த பேன்ட்ஸ் ஸ்டைல், இப்போது செமி-பார்மல், பார்மல் லுக்கிலும் இடம்பிடிக்க ஆரம்பித்துள்ளன. சர்ட், பேன்ட்ஸ் என பார்மலாக இருந்தாலும், கொஞ்சம் லூசான பிட் இப்போது ஸ்மார்ட் லுக்காக மாறிவிட்டது.

இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு மாணவர் ஹரி, “பழைய ஸ்டைல் திரும்பி வந்தாலும்… லுக் மட்டும் புதுசா இருக்கணும். எப்பவும் ஒரே மாதிரி டிரஸ் போட்டுட்டு இருந்தா ஒரு 'சேஞ்ச்' வேணும்; அது ஒரு ரெப்ரெஷ்மென்ட்டா இருக்கும். அதனால புதுசா டிரை பண்ணிப் பார்ப்போம். அந்த வகையில இப்போ கொரியன் பிட் பேன்ட்ஸ், பூட் கட் ஜீன்ஸ் டிரெண்டிங்கில் இருக்கு,” என்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us