UPDATED : அக் 25, 2026 08:41 AM
ADDED : அக் 24, 2026 02:44 PM

கோவை: இளம் பெண்கள், இப்போது க்யூட் சார்ம்ஸ், பீட்ஸ், மினி சாப்ட் டாய்ஸ், இனிஷியல்ஸ், கார்ட்டூன் கேரக்டர்ஸ் போன்றவற்றை பேகிலும் போனிலும் மாட்டி அலங்கரிக்கின்றனர்.
ஒரே பேக் ஒரே போன் ஆக இருந்தாலும், அதில் மாட்டும் சார்ம்ஸ் மூலம் தங்களுடைய ஸ்டைலை வெளிப்படுத்துகின்றனர்.
குறிப்பாக வலைதளங்களில் 'பேக் சார்ம் கலெக்ஷன்,' போன் சார்ம்' போன்றவை டிரெண்ட் ஆனதையடுத்து, பலவிதமான சார்ம்ஸ்களுக்கு இளைஞர்களிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது.
சிலர் தங்களுக்கு பிடித்த பூ, மிருகம், லெட்டர் போன்றவற்றை தேர்வு செய்கின்றனர். சிலர் தங்கள் ஆடைக்கு மேட்ச் ஆகும் வகையிலும் வாங்குகின்றனர்.
சிலர் தங்கள் பிறந்த மாதம், பிடித்த நிறம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டும் சார்ம்ஸை தேர்வு செய்கின்றனர்.
ஒரே பேக்கில் ஒன்றுக்கும் மேற்பட்ட சார்ம்ஸை சேர்த்து, ஒவ்வொரு முறையும் புதிய லுக் கொடுப்பதும் இளைஞர்களுக்கு பிடித்ததாகி வருகிறது.
தாங்கள் பயன்படுத்தும் பொருட்களில், தங்களுடைய நினைவுகள் மற்றும் விருப்பங்களை வெளிப்படுத்தும் ஒரு சிறிய அடையாளமாகவும் இந்த சார்ம்ஸ் மாறி வருகின்றன.
