தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/பேஷன்/காஸ்ட்லி ஆடைகள் தேவையில்லை: கலர் காம்பினேஷன் நல்லா இருந்தா போதும்!

காஸ்ட்லி ஆடைகள் தேவையில்லை: கலர் காம்பினேஷன் நல்லா இருந்தா போதும்!

காஸ்ட்லி ஆடைகள் தேவையில்லை: கலர் காம்பினேஷன் நல்லா இருந்தா போதும்!


UPDATED : ஜன 18, 2026 09:43 AM

ADDED : ஜன 18, 2026 05:25 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 18, 2026 09:43 AM ADDED : ஜன 18, 2026 05:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஆள் பாதி ஆடை பாதி' என்பார்கள். மற்றவர்கள் பார்வையில் நாம் எடுப்பாக தெரிய வேண்டும் என்பதற்காக, ஆயிரக்கணக்கில் செலவு செய்து விலை உயர்ந்த ஆடைகளைத்தான் அணிய வேண்டும் என்கிற அவசியமில்லை என்கிறார், பிரபல பேஷன் டிசைனர் இலக்கியா.

சரியான நிறங்களைத் தேர்வு செய்து அணிந்தாலே, சாதாரண உடையில் கூட நீங்கள் கம்பீரமாகத் தெரிவீர்கள். குறிப்பாக, ஆண்கள் ஷர்ட் மற்றும் பேன்ட்ஸ் அணியும் போது கவனிக்க வேண்டும்.

உடைகளின் விலை உங்களை அழகாக்குவதை விட, நீங்கள் தேர்வு செய்யும் நிறங்களின் பொருத்தம், உங்களை மற்றவர்களிடமிருந்து தனித்துக்காட்டும்.

மெரூன் மற்றும் பிஸ்தா கிரீன் போன்ற அடர் மற்றும் மென்மையான நிறங்களுக்கு கிரீம் நிற பேன்ட்ஸ் ஒரு 'கிளாசிக்' லுக்கைத் தரும். சிகப்பு, பிங்க் மற்றும் கிரே நிற சட்டைகளுக்கு கருப்பு நிற பேன்ட்ஸ் எப்போதும் ஒரு போல்டான தோற்றத்தை கொடுக்கும்.

நேவி புளூ சட்டையும் வெள்ளை நிற பேன்ட்சும் அலுவலகம் மற்றும் விசேஷங்களுக்கு ஒரு பிரீமியம் லுக்கைத் தரும்.

எனவே, இனி ஆடை எடுக்கும் போது விலையை விட, அந்த நிறங்கள் உங்களுக்கு பொருந்துகிறதா என்பதையும், சரியான காம்பினேஷனில் இருக்கிறதா என்பதையும் கவனித்தாலே போதும். நீங்கள் தான் அந்த இடத்தின் ஸ்டார்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us