தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/சுற்றுலா/ 'டிரெக்கிங்' செல்ல தப்பே அருவி தான் 'பெஸ்ட்!'

 'டிரெக்கிங்' செல்ல தப்பே அருவி தான் 'பெஸ்ட்!'

 'டிரெக்கிங்' செல்ல தப்பே அருவி தான் 'பெஸ்ட்!'


ADDED : செப் 24, 2026 12:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 12:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் - பாய்ந்தோடி வரும் அருவியை பார்க்க, யாருக்கு தான் ஆசை இருக்காது. அதிலும் மழைக்காலத்தில், அருவியை பார்ப்பது மனதுக்கு இதமாக இருக்கும். மழைக்காலத்தில் பார்க்க வேண்டிய அருவிகளில், தப்பே அருவியும் ஒன்றாகும். ஷிவமொக்காவுக்கு வரும் சுற்றுலா பயணியர், ஜோக் அருவியை பார்த்து மகிழ்கின்றனர். இம்மாவட்டத்தில் மேலும் பல அழகான அருவிகள் உள்ளன. இவற்றில் தப்பே அருவியும் ஒன்றாகும். ஷிவமொக்கா மாவட்டம், சாகரா தாலுகாவின், ஹொசகட்டே கிராமத்தின் அருகில், மேற்கு தொடர்ச்சி மலைகளின், சராவதி ஆறு பாயும் அடர்ந்த வனப்பகுதியில், இந்த அருவி அமைந்துள்ளது.

சராவதி வன விலங்குகள் பகுதியில், கண்களை பறிக்கும் இயற்கை அழகு கொஞ்சும், அடர்த்தியான வனப்பகுதியில், தப்பே அருவி இருப்பதால், சுற்றுலா பயணியரை சுண்டி இழுக்கிறது.

தப்பே என்றால், கன்னடத்தில் ஆழமான இடம் என்ற அர்த்தமாகும். சாகச பிரியர்களுக்கும், டிரெக்கிங் ஆர்வலர்களுக்கும் புதிய அனுபவத்தை அளிக்கும் இடம் இது.

தப்பே அருவியை பார்க்க விரும்பினால், அதிகம் கஷ்டப்பட வேண்டும். ஏன் என்றால், அங்கு செல்ல சரியான பாதை இல்லை. அடர்ந்த வனத்தின் நடுவே, செங்குத்தான பாதையில், 45 நிமிடம் நடந்து செல்ல வேண்டும்.

மரங்களின் வேர்கள், பாறைகளை பிடித்து கொண்டு, கீழே இறங்க வேண்டும். மிகவும் எச்சரிக்கையாக, ட்ரெக்கிங் செல்ல வேண்டும். கடினமான பாதையை கடந்து சென்றால், 300 - 350 அடி உயரத்தில் இருந்து பாயும் அற்புதமான அருவியை காணலாம்.

அக்டோபர் முதல் டிசம்பர் வரை, இந்த அருவியை பார்க்க தகுந்த காலமாகும். மழைக்காலத்தில் நீர் ஆக்ரோஷமாக பாயும்.

எனவே நீரில் இறங்குவது ஆபத்தானது. தொலைவில் அருவியையும், சுற்றிலும் உள்ள இயற்கை அழகையும் ரசித்து திரும்புவது நல்லது.

இங்கு செல்வோர் தங்களுடன் வழிகாட்டிகளை அழைத்து செல்ல வேண்டும். அடர்ந்த வனம் என்பதால், வழி மாறும் அபாயம் உள்ளது. குடும்பத்துடன், நண்பர்களுடன் சென்று சில மணி நேரம் பொழுது போக்கினால், மனம் உற்சாகமடையும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us