தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/ஆரோக்கியம்/உடலை சுத்தமாக வைத்திருப்பது முக்கியம்

உடலை சுத்தமாக வைத்திருப்பது முக்கியம்

உடலை சுத்தமாக வைத்திருப்பது முக்கியம்


ADDED : செப் 22, 2026 09:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 22, 2026 09:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாம் உட்கொள்ளும் உணவு, நாம் நம் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளும் முறை, உடற்பயிற்சி போன்ற அனைத்தும் நம் உடலை ஆரோக்கியமாக பேணிக்காப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. பெரும்பாலான நோய்கள் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளாததால் ஏற்படுகிறது. வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை சீகக்காய் உபயோகப்படுத்தி தலைக்கு குளிக்கலாம்.

சுத்தமான நீரை கொண்டு தினமும் கண்களை கழுவவேண்டும். மூக்கில் காணப்படும் சளி போன்ற திரவம் காய்வதால் மூக்கு துவாரத்தை அடைத்துக் கொள்ளும். தேவைப்படும் போதெல்லாம் மூக்கை பக்குவமாக சுத்தம் செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு சளி மற்றும் ஜலதோஷம் ஏற்படும் போது மென்மையான துணியை பயன்படுத்தி, மூக்கை சுத்தம் செய்ய வேண்டும்.

மென்மையான பற்பொடி மற்றும் பேஸ்ட் போன்றவை பற்களை சுத்தம் செய்வதற்கு உகந்தவைகள். தினமும் காலை எழுந்த உடன் மற்றும் இரவு உறங்கச் செல்லும் முன் என இரண்டு வேளை பற்களை சுத்தம் செய்ய வேண்டும். எந்தவொரு உணவுப் பொருளையும் உட்கொண்ட பின், சுத்தமான நீரை கொண்டு வாயை கழுவ வேண்டும். இவ்வாறு செய்வது, உணவுப் பொருள் பற்களின் இடையில் படிந்து துர்நாற்றத்தை ஏற்படுத்துவது, பல் ஈறுகளை கெடுப்பது மற்றும் பல் சொத்தை அல்லது பற்சிதைவு ஏற்படுவது போன்றவற்றை தடுக்கிறது.

சத்தான உணவுப்பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். இனிப்புப்பொருட்கள், சாக்லெட், ஐஸ்கிரீம் மற்றும் கேக் போன்ற உணவுகளை குறைந்த அளவிலேயே உட்கொள்ளவேண்டும். பற்சிதைவுக்கான அறிகுறிகள் காணும் போது, பல் மருத்துவரை உடனடியாக சந்தித்து ஆலோசிக்க வேண்டும்.

தோல் உடலை முழுவதும் மூடியுள்ளது. இது உடல் உறுப்புகளை பாதுகாக்கிறது மற்றும் உடல் வெப்ப நிலையை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. தோல் உடலில் உள்ள கழிவுப்பொருட்களை வியர்வையாக வெளியேற்ற உதவுகிறது. தோலில் குறைபாடு இருப்பின் வியர்வை சுரப்பிகள் அடைபடுகிறது. இதன் விளைவாக புண்கள் மற்றும் பருக்கள் போன்றவைகள் ஏற்படுகின்றன. தோலை சுத்தமாக வைத்துக்கொள்ள, தினமும் சுத்தமான தண்ணீர் மற்றும் சோப்பு தேய்த்து குளிக்க வேண்டும்.

சமைக்கும் முன், கைகளை சோப்பு கொண்டு கழுவுவது, பல நோய்கள் ஏற்படுவதை தடுத்து நிறுத்த உதவுகிறது. நகங்களை முறையாக வெட்ட வேண்டும். நகங்களை கடிப்பது தவிர்க்க வேண்டும். அவ்வப்போது கைகளை பராமரிக்க குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும். கழிவறை, குளியலறை மற்றும் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.

சமையல் செய்யும் போது சுகாதாரமான முறையில் சமைப்பதால் உணவு மாசுபடுதல், உணவு நச்சுப்படுதல் மற்றும் நோய் பரவுதல் போன்றவற்றை தடுத்து நிறுத்தலாம். சமைக்கும் பகுதி மற்றும் சமையல் பாத்திரங்களை துாய்மையாக வைத்துக் கொள்ளவேண்டும்.அழுகிய மற்றும் கெட்டுப்போன உணவுகளை உட்கொள்வதை தவிர்க்கவும். சமைக்கும் முன் மற்றும் பரிமாறும் முன் கைகளைக் கழுவவேண்டும். காய்கறி போன்ற உணவுப்பொருட்களை சமைப்பதற்கு முன் நன்கு கழுவவேண்டும். உணவுப் பொருட்களை சரியான முறையில் சேமித்து வைக்க வேண்டும். உணவுப் பொருட்களை வாங்கும் முன், எந்தநாள் வரை அந்த பொருளை பயன்படுத்தலாம் என்ற விபரத்தை பார்த்து வாங்கவும், சமையலறைக் கழிவுகளை சரியான முறையில் அப்புறப்படுத்தவும் வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us