UPDATED : செப் 20, 2026 08:21 AM
ADDED : செப் 19, 2026 12:51 PM

கைகளில் மெஹந்தி போடுவது வழக்கமான ஒன்று. இப்போது அதையே காதை சுற்றி போடுவது ஒரு பேஷனாகி விட்டது.
காதின் மேல் பகுதி, பின்புறம் என பல இடங்களில் மெஹந்தியால் டிசைன் வரைகின்றனர். பூ, இலை, கொடி, சிறிய புள்ளிகள் என விதவிதமான டிசைன்கள் வரைகின்றனர். காதணிகளுடன் சேர்த்து பார்க்கும்போது, இந்த டிசைன் கூடுதல் அழகை கொடுக்கிறது.
சிலர் காதணிகள் அணியாமலேயே நகை அணிந்தது போன்ற தோற்றத்துக்காக இதை பயன்படுத்துகின்றனர்.
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம், இந்த ஸ்டைல் பிரபலமாகி வருகிறது. திருமணம், விழாக்கள் மட்டுமின்றி போட்டோ ஷூட் மற்றும் நண்பர்களுடனான நிகழ்ச்சிகளுக்கும் இதை முயற்சி செய்கின்றனர்.
காதின் வடிவத்துக்கு ஏற்றபடி, சிறிய டிசைன் முதல் முழுவதுமாக சுற்றிய டிசைன் வரை போடலாம். சிலர் கருப்பு மெஹந்தி போன்ற நிறங்களில் டிசைன் போட்டு மாடர்ன் லுக்கையும் முயற்சி செய்கின்றனர்.
அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல், தோற்றத்தை மாற்றிக்கொள்ள விரும்புபவர்களுக்கு இது ஒரு எளிய ஐடியா.
காதணியுடன் மெஹந்தி டிசைனையும் சேர்த்து அணியும் இந்த புதிய ஸ்டைல், டிரெண்டாகி வருகிறது.
