தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/உணவு/டேஸ்டியான தேங்காய் பால் மில்க் ஷேக்...!

டேஸ்டியான தேங்காய் பால் மில்க் ஷேக்...!

டேஸ்டியான தேங்காய் பால் மில்க் ஷேக்...!


ADDED : ஏப் 03, 2023 11:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2023 11:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் வெயிலில் அதிகம் பயணிக்கும் சூழல் உருவாகும். இப்படி வெயிலில் அலைந்து களைத்துப் போய் வருவோர் தேடிச் செல்வது குளிர்பான கடைகளையும், சாலையோர இளநீர் கடைகளையும் தான்.அங்கு சீசனுக்கு தகுந்தாற் போல் விலையும் சற்று அதிகரித்தே இருக்கும். இதனால் சிலர் சூட்டைத் தணிக்கத் தண்ணீர் மட்டும் போது என நினைப்பது உண்டு.

இதற்கு மாற்றாக வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே கோடை வெப்பத்தை தணிக்கும் சத்தான மில்க் ஷேக் செய்வது குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்


தேங்காய் - 1கப்

ஏலக்காய் - 2

முந்திரிப் பருப்பு -10 (ஊறவைத்தது)

பாதாம் பருப்பு - 10 (ஊறவைத்தது)

பிஸ்தா - 10 (ஊறவைத்தது)

உலர்திராட்சை - 10 (ஊறவைத்தது)

சர்க்கரை - 4 தேக்கரண்டி

தேங்காய் தண்ணீர் - 1கப்

செய்முறை

ஒரு மிக்ஸி ஜாரில் 1கப் தேங்காய், 2ஏலக்காய் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து பாலை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். மீண்டும் அரைத்த தேங்காயை 1கப் தண்ணீர் சேர்த்து அரைத்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு மற்றொரு மிக்ஸி ஜாரில், ஊற வைத்த பாதாம், பிஸ்தா, முந்திரி, உலர்திராட்சை, 1கப் தேங்காய் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து மிக்ஸி ஜாரில் தேங்காய் பால், அரைத்த பேஸ்ட், 4 தேக்கரண்டி வெள்ளைச் சர்க்கரை சேர்த்து அரைக்க வேண்டும்.

பிறகு அதை ஒரு பாத்திரத்தில் மாற்றி பிரிட்ஜில் ஒருமணி நேரம் வைக்க வேண்டும்.

இறுதியாக நறுக்கிய உலர் பருப்பு தூவலைச் சேர்த்து அருந்தினால் சுவை அட்டகாசமாக இருக்கும்.

பயன்கள்

தேங்காய் பால் வயிற்றுப் புண்ணைக் குணமாக்குவதோடு, உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.

இதில் உலர் பருப்புகள் சேர்க்கப்பட்டுள்ளதால், உடலுக்கு தேவையான சக்தி மற்றும் ஆற்றலை தரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us