தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/உணவு/மட்டன் கோலா உருண்டை மொறு மொறுவென வர இப்படிப் பண்ணுங்க..!

மட்டன் கோலா உருண்டை மொறு மொறுவென வர இப்படிப் பண்ணுங்க..!

மட்டன் கோலா உருண்டை மொறு மொறுவென வர இப்படிப் பண்ணுங்க..!


UPDATED : ஜூன் 27, 2023 06:45 PM

ADDED : ஜூன் 27, 2023 06:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 27, 2023 06:45 PM ADDED : ஜூன் 27, 2023 06:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மட்டனில் இருந்து தயாரிக்கப்படும் கோலா உருண்டை நம் வீடுகளில் ஞாயிறு மதிய அசைவ உணவில் இடம்பெறும் முக்கிய சைட் டிஷ் ஆகும். குழந்தைகளை அதிகமாகக் கவரும் மொறு மொறு கோலா உருண்டை அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவு. இதனை எளிதில் செய்ய ஏற்ற ரெசிபியைப் பார்ப்போமா?

தேவையான பொருட்கள்

கால் கிலோ மட்டன், பெரிய வெங்காயம், உள்ளங்கையளவு பொட்டுகடலை, இரண்டு பச்சை மிளகாய், ஒரு டீஸ்பூன் மஞ்சள், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பொடியாக நறுக்கிய இஞ்சி, இரண்டு பூண்டு, கரம் மசாலா, மிளகாய்த் தூள், மல்லித்தூள், கல் உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை.

செய்முறை

முதலில் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, பொட்டுக்கடலை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

மிக்ஸி ஜாரில் ஒரு துண்டு பட்டை, ஒரு மேஜைக்கரண்டி சோம்பு, 2 கிராம்பு, மற்றும் ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் அதில் 2 பல் பூண்டு, ஒரு துண்டு இஞ்சி, ஒரு பச்சை மிளகாய் சேர்த்து மீண்டும் அரைத்து கொள்ளவும்.

அடுத்து தவாவை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி சுடவைக்கவும்.

Image 1132484


எண்ணெய் சுட்டதும் அதில் மட்டன் துண்டுகள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி சுமார் ஐந்து நிமிடம்வரை வேகவிடவும். இந்த மட்டனை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

மட்டனை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அரைத்த மட்டனில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், கொத்தமல்லி, அரைத்து வைத்திருக்கும் பொட்டுக்கடலையைப் போட்டு நன்கு பிசைந்துகொள்ளவும்.

இப்போது பிசைந்து வைத்திருக்கும் மட்டனை உருண்டைகளாகப் பிடித்து ஒரு தட்டில் வைத்துக்கொள்ளவும். பின்னர் இந்த உருண்டைகளைப் பொரித்து எடுத்தால் சூடான, சுவையான கோலா உருண்டைகள் ரெடி..!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us