UPDATED : மே 24, 2026 12:44 PM
ADDED : மே 24, 2026 05:50 AM

தேவையான பொருட்கள்:
1/2 கிலோ எலும்பில்லா சிக்கன்
1 பெரிய வெங்காயம்
1 சிறிய குடை மிளகாய்
2 முட்டை
2 ஸ்பூன் சோள மாவு
3 ஸ்பூன் மைதா மாவு
2+1 ஸ்பூன் சோயா சாஸ்
1 ஸ்பூன் வினிகர்
2+1 ஸ்பூன் மிளகு துாள்
2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
1/4 கப் தக்காளி சாஸ்
1/4 கப் சிவப்பு மிளகாய் சாய்ஸ்
1/2 ஸ்பூன் வறுத்த எள்
தாளிக்க:
4 வரமிளகாய்
15 முந்திரி
2 ஸ்பூன் நறுக்கிய பூண்டு
தேவையானஅளவு உப்பு, எண்ணெய்
செய்முறை:
10 காஷ்மீரி மிளகாயை சுடு நீரில் ஊற விட்டு அரைத்து சில்லி சாஸ் தயார் செய்யலாம். இது பாக்கெட்-களில் வாங்கும் சாஸை விட காரம் நன்றாக இருக்கும்.
டிராகன் சிக்கன் செய்வதற்கு நீள்வாக்கில் வெட்டிய எலும்பில்லா சிக்கன் துண்டுகளை தான் பயன்படுத்துவார்கள். நன்கு கழுவிய சிக்கன் துண்டுகளில்,இஞ்சி பூண்டு விழுது, சோள மாவு, மைதா மாவு, மிளகு துாள் மற்றும் உப்பு கலந்து பின் முட்டை,சோயா சாஸ்,வினிகர் சேர்த்து கலந்து 30 நிமிடங்கள் ஊற விடவும்.
பின் அடுப்பில் வாணலி வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், மீடியம் தீயில் வைத்து சிக்கன் துண்டுகளை பொரித்து எடுக்கவும். இதுவே மிகவும் சாப்ட்-டாக சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இனி,கடாயில் பொரித்த எண்ணெயில் இருந்து 3 ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி பூண்டு வரமிளகாய், முந்திரி சேர்த்து லேசாக வதக்கி, நறுக்கிய வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.லேசாக வதங்கினால் போதும்.
பின் நீளமாக நறுக்கிய குடை மிளகாய் சேர்த்து கிளறவும். குடை மிளகாய் லேசாக வதங்கியதும், தக்காளி, சிவப்பு மிளகாய் சாஸ் சேர்க்கவும். மிளகு துாள் சர்க்கரை சேர்த்து கலந்து விடவும். இதனுடன் 100 மி,லி., அளவில் தண்ணீர் தெளித்து சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
சில நிமிடங்கள் அதிக தீயில் வைத்து கிளறி விட்டு, அடுப்பை அணைக்கவும். பின் மல்லிதழை சேர்த்து, கடைசியாக எள் துாவி பரிமாறவும்.அவ்வளவுதான். மிகவும் சாஃப்ட்-டான, இனிப்பும் காரமுமான டிராகன் சிக்கன் ரெடி.
