தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/உணவு/யோகர்ட்டில் கொட்டிக்கிடக்குது நன்மைகள் -யோசிக்காம சாப்பிடுங்க!

யோகர்ட்டில் கொட்டிக்கிடக்குது நன்மைகள் -யோசிக்காம சாப்பிடுங்க!

யோகர்ட்டில் கொட்டிக்கிடக்குது நன்மைகள் -யோசிக்காம சாப்பிடுங்க!


UPDATED : ஜூலை 16, 2022 10:35 AM

ADDED : ஜூலை 15, 2022 08:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 16, 2022 10:35 AM ADDED : ஜூலை 15, 2022 08:28 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாலின் உப பொருளான யோகர்ட்டில் புரதம், கால்சியம், பி காம்பிளக்ஸ் வைட்டமின்கள் என உடல் இயக்கத்திற்கு தேவையான முதன்மை சத்துக்கள் நிரம்பியுள்ளன. யோகர்ட் எப்படி தயாரிக்கப்படுகிறது? அதனை தினம் எடுத்துக்கொள்வதால் என்னென்ன பலன்கள் என பார்ப்போம்.

யோகர்ட் என்றால் என்ன?


பால் பொருளான யோகர்ட், நொதித்தல் செயல்முறை மூலம் தயாரிக்கப்படுகிறது. பாலை சூடுப்படுத்தி, லேக்டோபேசிலஸ், பல்கேரிகஸ், ஸ்ட்ரெப்டோகாகஸ் போன்ற புரோபயாடிக்குகளை கொண்டு புளிக்கவைக்கின்றனர். அது பாலில் உள்ள லாக்டோசை, லாக்டிக் அமிலமாக மாற்றுகின்றது. இந்த லாக்டிக் அமிலம் பாலில் உள்ள புரதங்களை உறையச் செய்து, அதன் மூலம் கெட்டியான அமைப்பையும் இனிப்புடன் கூடிய புளிப்புச் சுவையையும் தருகிறது. இதனை அப்படியே சாப்பிடலாம், பழங்களுடனும் சுவைக்கலாம்.

யோகர்ட் சாப்பிடுவதால் கிடைக்கும் 10 நன்மைகள்




1.) செரிமானம் மேம்படும்



வயது ஏற ஏற பலருக்கும் செரிமானப் பிரச்னை உருவாகிறது. புரோபயாடிக் நிறைந்த யோகர்ட் சாப்பிடுவதால் குடல் இயக்கங்கள் சீராகும். உடலிலுள்ள நுண்ணியிர்களை அதிகரிக்கும். குடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழித்து செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க யோகர்ட் உதவும். மலச்சிக்கலை போக்கும். பால் பொருட்கள் ஒவ்வாமை கொண்டவர்களும் யோகர்ட் சாப்பிடலாம். ஒன்றும் செய்யாது.

2.) இயற்கையான நோய் எதிர்ப்பு பூஸ்டர்



சளி, காய்ச்சல் போன்ற சுவாச பிரச்சனைகள், இரைப்பை குடல் தொற்று போன்றவற்றிற்கு எதிராக யோகர்ட் திறம்பட போராடுகிறது. இதிலுள்ள மெக்னீசியம், செலினியம் மற்றும் ஜிங் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது.

3.) ரத்த சர்க்கரை அளவை ஒழுங்குப்படுத்தும்



வீட்டில் தயாரிக்கப்பட்ட, இனிப்பில்லாத யோகர்ட்டை தொடர்ந்து உட்கொள்வதால் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும். டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இனிப்பில்லாத யோகர்ட் மிகவும் நல்லது.

4.) எலும்புகளை இரும்பாக்கும்



பொதுகாவே பால் பொருட்களில் கால்சியம் அதிகம். அதிலும் யோகர்ட்டை கால்சியம் பேக்டரி என்றே சொல்லலாம். எனவே இது எலும்புகளை வலுவாக்க சிறந்ததாக உள்ளது. யோகர்ட்டை தினசரி வழக்கமாக்கிக் கொண்டால் எலும்பின் நிறையையும், வலுவையும் பாதுகாக்கும். இதனால் எலும்பு முறிவு, எலும்புகள் மெலிவுற்று உடையும் ஆஸ்டியோபோராசிஸ் பிரச்னைகள் வராமல் இருக்கும்.

Image 971197


5.) உயர் ரத்த அழுத்தம் உள்ளவரா...



தினமும் யோகர்ட் உண்பவரின் ரத்த அழுத்தம் நல்ல நிலையில் பராமரிக்கப்படுவதாக 2021ல் தெற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வில் கூறியுள்ளனர். சயின்ஸ் டெய்லியில் இந்த ஆய்வின் முடிவுகள் உள்ளன. ரத்தம் அழுத்தம் சரியான அளவில் தொடர்ந்தாலே இதய நோய்கள் அண்டாது.

6.) பசியை குறைக்கும்



பசி பிரச்னையால் தான் பலருக்கு உடல் எடை கூடிப்போகிறது. யோகர்ட்டில் உள்ள அதிக புரதச் சத்து அதனை உண்டவுடன் திம்மென உணரச் செய்யும். பசியை குறைக்கும். அதனால் அதிக கலோரி உணவுகளை சாப்பிட மாட்டோம். இதனால் நாளாக நாளாக நம் உடல் எடை குறையும்.

7.) மனதை லேசாக்கும்



யோகர்ட்டில் உள்ள புரோபயாட்டிக்குகள் பதட்டம், மன அழுத்தம் போன்றவற்றை குறைத்து மனதை லேசாக்கும். இதனால் மனச்சோர்வு உள்ள நபர்கள் நன்றாக இருப்பதாக உணர்கிறார்கள் என ஆய்வுகள் கூறுகின்றன.

8.) ஒவ்வாமை அறிகுறியை குறைக்கும்



அலர்ஜிக்கு எதிராக நமது நோய் எதிர்ப்பு அமைப்பு உருவாக்கும் ஆன்டிபாடிகளின் எண்ணிக்கை யோகர்ட் உண்பதால் குறையும். யோகர்ட்டில் உள்ள புரோபயாடிக்குகள் தான் இச்செயலுக்கும் காரணம். இதனால் அலர்ஜியின் அறிகுறிகள் குறையும்.

9.) உடல் வீக்கங்கள் காணாமல் போகும்



தினமும் யோகர்ட் சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் வீக்கம் குறையும். ஆட்டோஇம்யூன் நோய்கள் எனப்படும், நோய் எதிர்ப்பு அமைப்பு உடலின் சொந்த ஆரோக்கியமான திசுக்களையே வெளிப்பொருள் என்று நினைத்து தாக்குவது இந்த இன்ப்ளமேஷன் எனும் வீக்கங்களால் தான். மேலும் நீரிழிவு நோய், புற்றுநோய் மற்றும் மூட்டுவலி ஆகியவற்றிற்கும் இது காரணமாகிறது.

10.) புற்றுநோயை எதிர்க்கும்



ஆம். யோகர்ட் புற்றுநோயை எதிர்க்கும் தன்மை கொண்டது. இன்ப்ளமேஷன் புற்றுநோய்க்கு மூலமாக சொல்லப்படுகிறது. இது உடல் வீக்கங்களை குறைப்பதால் நமது உடலை பெருங்குடல், சிறுநீர்ப்பை மற்றும் மார்பக புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us