தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/லைப் ஸ்டைல்/உணவு/ஸ்பைசியான மட்டன் வறுவல்... மணக்க மணக்க இதோ !

ஸ்பைசியான மட்டன் வறுவல்... மணக்க மணக்க இதோ !

ஸ்பைசியான மட்டன் வறுவல்... மணக்க மணக்க இதோ !


UPDATED : ஏப் 15, 2023 12:13 PM

ADDED : ஏப் 15, 2023 12:09 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 15, 2023 12:13 PM ADDED : ஏப் 15, 2023 12:09 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மட்டன் வறுவல், மட்டன் சுக்கா மற்றும் மட்டன் பெப்பர் ஃபிரை என அனைத்தையும் ஒரே முறையில் கொஞ்சம் மாற்றி செய்தாலே போதுமானது என பலரும் எளிதாக நினைக்கின்றனர். ஆனால், டேஸ்ட் சொதப்பலாக வரும் போது, அப்படி பண்ணியிருக்கலாமோ? கொஞ்சம் ரிஸ்க் எடுத்திருக்கலாமோ? என வருத்தப்படுவர். பாரம்பரிய முறையில் கொத்தமல்லி, காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை பயன்படுத்தி மட்டன் வறுவல் சமைக்கும் போது அலாதியான சுவை கிடைக்கக்கூடும். எனவே, மணக்க மணக்க டேஸ்டியான மட்டன் வறுவல் ரெசிபி இதோ...

தேவையானப் பொருட்கள் :


மட்டன் : 1/2 கிலோ

சிறிய வெங்காயம் : 20

பெரிய வெங்காயம் : 1

தேங்காய் : 2 பீஸ்

தக்காளி : 1

பூண்டு : 10

இஞ்சி, பூண்டு விழுது : 2 டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் : 1

மிளகாய் தூள் : 2 டீஸ்பூன்

மல்லித்தூள் : 2 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் : 1/2 டீஸ்பூன்

கொத்தமல்லி : 1 டீஸ்பூன்

சோம்பு : 1 1/4 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் : 4

பட்டை : 4

கிராம்பு : 4

பிரிஞ்சி இலை : 2

ஏலக்காய் : 2

நெய் : 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை : 3 கொத்து

கொத்தமல்லி இலை : சிறிதளவு

உப்பு, சமையல் எண்ணெய் : தேவையான அளவு

Image 1098374

எப்படிச் செய்வது ?


ஒரு கடாயில் மட்டன், நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலையுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக விட வேண்டும். இதில், சிறிதளவு மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மல்லித்தூள் தலா ஒரு டீஸ்பூன் வீதம் சேர்க்கவும். பின், தேவையான அளவு உப்பு, இஞ்சி, பூண்டு விழுது, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கி வேகவிடவும். இதற்கு குறைந்தப்பட்சமாக 30 முதல் 40 நிமிடங்கள் வரை ஆகக்கூடும்.

வறுவலுக்கு தேவையான பவுடரை தயாரிக்க ஒரு கடாயில் சோம்பு, கொத்தமல்லி, சிவப்பு மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை போட்டு எண்ணெய் விடாமல், குறைவான தணலில் நன்றாக வறுக்கவும். பின், சூடு ஆறியவுடன் மிக்சி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.

Image 1098373


ஒரு மண்சட்டி அல்லது கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சிறிது பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும். பின், பூண்டு சேர்க்கவும். (பூண்டை அப்படியே முழுதாகவோ அல்லது இடித்தோ சேர்க்கலாம்). தொடர்ந்து, கறிவேப்பிலை, சிறிய வெங்காயத்தை நறுக்காமல் அப்படியே முழுதாக சேர்த்து வதக்கவும். இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாடை போகுமளவுக்கு நன்றாக வதக்கவும். பின், மஞ்சள் தூள், மல்லித்தூள் மற்றும் மிளகாய்தூளை சேர்த்து வதக்கவும். அடுப்பை குறைவான தணலில் வைத்திருக்க வேண்டும். தொடர்ந்து, தேங்காயை அரைத்து அதன் பாலை மற்றும் சேர்க்கவும். அப்போது சிறிது நறுக்கிய கொத்தமல்லி இலையையும் சேர்த்து வதக்க வேண்டும். ஓரிரு நிமிடங்களில் இந்த மசாலாக் கலவையானது தொக்கு பதத்தில் வரக்கூடும்.

இப்போது மட்டன் வேக வைத்த தண்ணீரை சேர்த்து கொதிக்க விடவும். கிரேவி பதத்துக்கு வந்தவுடன் வேகவைத்த மட்டன் துண்டுகளை இதில் சேர்த்து, மீண்டும் வேக விடவும். 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து தண்ணீர் நன்றாக வற்றியவுடன் கிரேவி பதத்தில் இருக்கக்கூடும். அப்போது அரைத்து வைத்த மசாலா பவுடர், நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் சிறிது நெய் சேர்த்து நன்றாக கலக்கினால், மிருதுவான, சுவையான மட்டன் வறுவல் மணக்க மணக்க ரெடி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us