sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

லைப் ஸ்டைல்

/

உணவு

/

நீரிழிவு உள்ளவர்களின் உணவில் அவசியம் இருக்க வேண்டிய முழு தானியங்கள்!

/

நீரிழிவு உள்ளவர்களின் உணவில் அவசியம் இருக்க வேண்டிய முழு தானியங்கள்!

நீரிழிவு உள்ளவர்களின் உணவில் அவசியம் இருக்க வேண்டிய முழு தானியங்கள்!

நீரிழிவு உள்ளவர்களின் உணவில் அவசியம் இருக்க வேண்டிய முழு தானியங்கள்!


UPDATED : பிப் 18, 2023 03:32 PM

ADDED : பிப் 17, 2023 11:12 PM

Google News

UPDATED : பிப் 18, 2023 03:32 PM ADDED : பிப் 17, 2023 11:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முழு தானியங்கள் எனப்படும் கம்பு, கேழ்வரகு, சோளம், பார்லே, மக்காச்சோளம் மற்றும் கோதுமை வகைகளில் கிளைசெமிக் குறியீடு குறைவு. இதனால் கார்போஹைட்ரேட் உணவுகளைப் போன்று ரத்த சர்க்கரை அளவை விரைவில் உயர்த்தாமல், நிர்வகிக்க உதவும். ஒரு காலத்தில் நமது கிராமங்களில் அன்றாட உணவாக இருந்த இவை இன்று அரிதான உணவாகிவிட்டது.

முழு தானியங்கள்


மேலே கூறிய சோளம், கம்பு, கோதுமை போன்ற தாவரங்களின் விதைகளையே முழு தானியங்கள் என்கிறார்கள். பதப்படுத்தப்படாத முழு தானியங்கள் மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கும். தவிடு, எண்டோஸ்பெர்ம் மற்றும் விதையின் உட்கரு. தானியத்தின் மையப் பகுதியான எண்டோஸ்பெர்ம் தான் மாவுச்சத்தின் மூலம். நாம் தவிடு என நீக்கும் மேல் தோலில் தான் கரையாத நார்ச்சத்து, பி வைட்டமின்கள் மற்றும் பைட்டோகெமிக்கல்கள் இருக்கின்றன. விதையின் கருவில் புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின் ஈ உள்ளிட்டவை உள்ளன.

ஏன் முழு தானியங்கள் நல்லது

Image 1069876
முழு தானியங்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமல்ல, முழு குடும்பத்திற்கும் சிறந்தது. முழு தானிய உணவுகள் பொதுவாக இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த சிறந்தவை. இருப்பினும், முழு தானியங்களும் கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகள் தான். எனவே அதிகம் சாப்பிடக் கூடாது. முழு தானிய உணவுகள், இதய நோய், பக்கவாதம், சில வகையான புற்றுநோய் மற்றும் வகை 2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கும் என்று சில ஆய்வுகள் காட்டுகின்றன.

தினம் ஒரு முழு தானியம்


ஒவ்வொரு கிழமை ஒரு முழு தானியம் என முடிவு செய்துகொண்டு சாப்பிட வேண்டும். பிரவுன் அரிசி, ஓட்ஸ், மரகோதுமை என ஏராளமான முழு தானியங்கள் உள்ளன. அவற்றை பிடித்தது போல் சமைத்துச் சாப்பிடலாம். வெள்ளை அரிசிக்கு பதில் பிரவுன் அரிசியைப் பயன்படுத்தலாம். மக்காச்சோளத்தை பாப்கார்ன் செய்து சாப்பிடலாம். இனிப்பு, உப்பு சேர்க்கக் கூடாது. தற்போது முழு தானிய பிரட்கள் கூட கிடைக்கின்றன. அதையும் சாப்பிடலாம்.






      Dinamalar
      Follow us