/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
ஆரோக்கியம்
/
கொழுப்பை கரைக்க உதவும் 15 இயற்கை உணவுகள்..!
/
கொழுப்பை கரைக்க உதவும் 15 இயற்கை உணவுகள்..!
UPDATED : ஜூன் 06, 2023 06:52 PM
ADDED : ஜூன் 06, 2023 06:48 PM

அன்றாடம் நம் எடுத்து கொள்ளும் உணவுகள் வாயிலாக உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க இயலும். உடலில் சூட்டை ஏற்படுத்த கூடியவற்றை தெர்மோஜெனிசிஸ் என்றழைப்பர். சில உணவுகள் இயற்கையாக உடலில் சூட்டை அதிகரிக்க செய்ய கூடியவை. அவற்றை
எடுத்து கொள்ளும் போது தானாகவே,தேவையற்ற கொழுப்பு கரையும். தினமும் இந்த உணவு வகைகளில் ஒன்றை எடுத்து கொள்வது நல்லது. கொழுப்பை கரைக்க உதவும் 15 உணவுகள் என்னவென்று பார்ப்போம்.
1.பசலைக்கீரை :
நார்ச்சத்து நிறைந்த பசலைக்கீரை எடுத்து கொள்வது பசியை குறைப்பதோடு, திருப்தியை அதிகரிக்கும்.
2.எலுமிச்சை :
எலுமிச்சையில் வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் தனிம,ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இதில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட்ஸ், உடல்
செல்கள் சீராக செயல்பட உதவும்.
![]() |
இதில் தெர்மோஜெனிசிஸ் அதிகளவில் இருப்பதால், கொழுப்பை குறைக்க உதவும். ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட்ஸ் இருப்பதால், உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது.
4. நட்ஸ் வகைகள் :
நட்ஸ் வகைகளில் தெர்மோஜெனிக் விளைவுகள் இருப்பதும், எண்ணற்ற வைட்டமின், மினரல்ஸ் மற்றும் நார்ச்சத்து இருக்கிறது. உடல் நச்சுக்களை
நீக்க உதவுவதுடன், திருப்தி அளவை அதிகரிக்கிறது.
5. முட்டை :
வைட்டமின்கள், புரோட்டீன், கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவான முட்டை எடுத்து கொண்டால், உடல் எடையை குறைக்க தூண்டுவதில் முக்கிய
பங்காற்றுகிறது
![]() |
சியா விதைகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. ஏராளமான ஊட்டச்சத்துகள், நிறைந்துள்ள சியா விதைகளை எடுத்து கொண்டால், பசியை கட்டுப்படுத்துவதோடு, தேவையற்ற கொழுப்புகளை குறைக்க உதவும்.
7. காபி :
டீ போன்றே, காபியும் அருந்துவதால், உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, கொழுப்பு அதிகரிப்பை குறைக்க உதவுகிறது.
8. ஆரஞ்சு பழம் :
![]() |
9.பிரக்கோலி :
வைட்டமின்கள் ஏ. சி, கே நிறைந்த பிராக்கோலி, கெட்ட கொழுப்புகளை குறைப்பதிலும், உடலில் இருந்து நச்சு பொருட்களை வெளியேற்றுவதில் உதவி செய்கிறது.
10. தண்ணீர்விட்டான் கிழங்கு (அ) அஸ்பராகஸ் :
தனித்துவமான சுவைக்கொண்ட அஸ்பராகஸில், குவர்செடின் என்னும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளிட்ட மருத்துவ குணங்கள் கொண்டது. இது உடல் எடை அதிகரிப்பதற்கு எதிராக போராட உதவுகிறது.
11. மீன் வகைகள் :
சாலமன், டீனா போன்ற மீன்களில் ஓமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளது. வீக்கத்தை
குறைத்து நல்ல கொழுப்பு அதிகரிக்க உதவுகிறது. கொழுப்பில் உள்ள டிரைகிளிசரைடுகள் அளவை குறைக்க உதவுகிறது.
![]() |
தக்காளியில் லைகோபின் இருப்பதால், வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. உடலின் எடையை குறைப்பதோடு, ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை
குறைக்க உதவுகிறது.
13. கேல் கீரை :
உணவுக்கு முந்தையை உடலின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் கேல் கீரை, உடல் எடையை குறைக்கவும், டைப் - 2 நீரிழிவு பாதிப்பை தடுக்க உதவுகிறது.
14. பூண்டு :
தெர்மோஜெனிசிஸை தூண்ட உதவுவதோடு, கொழுப்பு செல்களின் எண்ணிக்கையை கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள உதவுகிறது.
![]() |
அனைத்து தானிய வகைகளிலும் ஆரோக்கியமான கொழுப்பு, நார்ச்சத்து மற்றும் மற்ற ஊட்டச்சத்துகள் இருப்பதால், ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கவும், வளர்சிதை மாற்றம் தொடர்பாக நோய் பாதிப்பை தடுக்க உதவுகிறது.