/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
ஆரோக்கியம்
/
வயிறு உப்புசத்தில் இருந்து நிவாரணம் பெற உதவும் 5 ஆசனங்கள்
/
வயிறு உப்புசத்தில் இருந்து நிவாரணம் பெற உதவும் 5 ஆசனங்கள்
வயிறு உப்புசத்தில் இருந்து நிவாரணம் பெற உதவும் 5 ஆசனங்கள்
வயிறு உப்புசத்தில் இருந்து நிவாரணம் பெற உதவும் 5 ஆசனங்கள்
UPDATED : செப் 01, 2023 08:34 AM
ADDED : செப் 01, 2023 08:27 AM

வீக்கம் மற்றும் உப்புசம் காரணமாக உங்கள் வயிறு பெரிதாகத் தோன்றலாம் மற்றும் முழுமை அல்லது இறுக்கம் போன்ற சங்கடமான உணர்வின் விளைவாக உங்கள் ஆடைகள் இறுக்கமாக உணரலாம். உணவுப் பழக்கவழக்கங்கள், உணவுக்கான அசாதாரண எதிர்வினைகள் அல்லது குறிப்பிட்ட மருத்துவப் பிரச்சனைகளால் உப்புசம் ஏற்படலாம்.
சில உணவுகள் மற்றும் பானங்கள், அத்துடன் செரிமான அமைப்பில் வாயுக்கள் குவிவதற்கு வழிவகுக்கும் உணவு முறைகள் உப்புசத்துடன் தொடர்புடையவை. யோகா ஆசனங்கள் உப்புசம் தொடர்பான அசௌகரியத்தை நிவர்த்தி செய்வதில் பயனுள்ளதாக இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. பின்வரும் யோசாசன முறைகள் வீக்கம் மற்றும் வயிறு உப்புசத்தை குறைப்பதோடு பிரச்னைகளையும் சரிசெய்வதாக கூறப்படுகிறது.
அபானாசனம்
![]() |
இந்த நிலையில் மூச்சை இழுத்து, ஓரிரு விநாடிகளுக்குப்பின் மூச்சை வெளியே விட்டபடி இரு முட்டிகளையும் மார்புப் பக்கம் நகர்த்துங்கள். இப்போது கால்கள் நன்கு அகண்டு, முழங்கைகள் தரையைத் தொடும். ஓரிரு விநாடிகளுக்குப்பின், மூச்சை உள்ளிழுத்துக்கொண்டே முட்டிகளை பழைய நிலைக்குக் கொண்டுவரவும். இதுபோல ஆறு முறை செய்யவும்.
சேது பந்த சர்வாங்காசனம்
![]() |
முதலில் தரையில் கால் நீட்டிப் படுங்கள். பின்னர் கால்களை மடித்து பாதங்களை தரையில் ஊன்றிய நிலையில் வைக்க வேண்டும். உள்ளங்கைகளை தரையோடு சேர்த்து வையுங்கள். கைகளை வளைக்காமல் நேராக வைக்க வேண்டும். இப்போது இடுப்பை மேலே உயர்த்துங்கள். மெல்ல முதுகையும் உயர்த்துங்கள்.
இடுப்பை கைகளால் தாங்கும்படி பிடித்துக் கொள்ளுங்கள்.இப்போது தலை, கழுத்து, தோள் பட்டை வரைக்குமே தரையில் இருக்க வேண்டும். ஆழ்ந்து மூச்சை இழுத்து விடுங்கள். மூச்சை விடும்போது மீண்டும் தரையில் உடலை கிடத்துங்கள். இப்போது ரிலாக்ஸ் ஆகுங்கள். இது போல் ஐந்து முறை செய்யலாம்.
ஆனந்த பாலாசனம்
![]() |
முன்னோக்கிச் சென்று, உங்கள் கால்களின் உட்புறம் அல்லது வெளிப்புறத்தைப் பிடித்துப் பிடிக்கவும். முழங்கால்களை பிரிக்கவும், அவற்றை அக்குள் நோக்கி நகர்த்தவும்.
உங்கள் குதிகால்களை உங்கள் கையில் வளைத்து, பக்கத்திலிருந்து பக்கமாக மெதுவாக அசைக்கவும். உங்கள் மூச்சை, ஆழமாக உள்ளிழுக்கவும் மற்றும் வெளியேற்றவும். இந்த ஆசனத்தில் 15 விநாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும். இவ்வாறு இந்த ஆசனத்தை 3 முறை செய்யவும். முதுகு தண்டு பிரச்சனை உள்ளவர்கள், வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம்.
உத்தனாசனம்
![]() |
கைகளை இடுப்பில் வைத்துக்கொண்டு தரையில் கால்களை நன்றாக ஊன்றி நேராக நிற்க வேண்டும். இப்போது மூச்சை வெளியேற்றியவாறு இடுப்பை வளைத்து மெதுவாக தலையை குனியுங்கள். கால்கள் வளையாமலும் வயிறு தொடைகளில் அழுந்தி இருக்குமாறும் பார்த்துக் கொள்ளுங்கள்.
இப்போது கைகளை கால்களுக்கு பக்கவாட்டில் கொண்டுவந்து தரையில் ஊன்றி நிற்க வேண்டும். தலை உள்பக்கமாக பார்த்து இருக்க வேண்டும். இந்த நிலையில் 10 வினாடிகள் தொடர வேண்டும்.
பச்சிமோத்தாசனம்
![]() |
அடுத்து, இரு கை ஆள்காட்டி விரல்களால், இரு கால் கட்டை விரல்களையும் கொக்கி போல மாட்டி பிடித்துக் கொள்ளவும். அவ்வாறு பிடித்த பிறகு, கை முட்டிகளை சற்று மடக்கி, நெற்றியால் கால் முட்டிகளை தொட வேண்டும். இதே நிலையில், மூச்சை நன்கு இழுத்து விடவும். 1-10 எண்ணிவிட்டு, மூச்சை இழுத்தபடியே நிமிர்ந்து, கைகளை தளர்த்தி ரிலாக்ஸ் செய்யவும்.
தொடக்கத்தில், கைகளால் கால்களை பிடிப்பது கடினம். அதனால், கால் முட்டிகளுக்கு கீழே எங்கே பிடிக்க முடிகிறதோ, அங்கு பிடித்துக் கொள்ளவும். இது உங்கள் செரிமானத்தை பாதிக்கும் மன அழுத்தத்தை நிதானப்படுத்தவும் உதவுகிறது, இது மேலும் வீக்கம் மற்றும் உப்புசம் அல்லது வாயு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.