UPDATED : செப் 07, 2023 04:41 PM
ADDED : செப் 07, 2023 04:38 PM

ஹீமோகுளோபின் என்பது ரத்த அணுக்களில் காணப்படும் திரவமாகும். இது ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜனை உடலில் அனைத்து உறுப்புகளுக்கும் கொண்டு செல்வதிலும்,ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தை அளிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. சாதாரணமாக ஆண்களுக்கு ஒரு டெசிலிட்டருக்கு 14 முதல் 17 கிராம் வரையிலும், பெண்களுக்கு ஒரு டெசிலிட்டருக்கு 12 முதல் 15 கிராம் வரையில் ஹீமோகுளோபின் இருக்கும். இதற்கு குறைவாக ஹீமோகுளோபின் இருப்பது ரத்த சோகையை குறிக்கிறது. கர்ப்பிணி பெண்கள் பலர், ஹீமோகுளோபின் குறைப்பாட்டால் ரத்த சோகை பாதிப்புக்குள்ளாகின்றனர்.
ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவும் 7 உணவுகள் குறித்து பார்ப்போம்.
1. வைட்டமின் - சி பழங்கள் : ஆரஞ்சு பழம், பெர்ரி மற்றும் திராட்சை போன்ற பழங்களில் வைட்டமின் - சி சத்து நிறைந்துள்ளது. உணவு எடுத்து கொண்டதற்கு பின், ஆரஞ்சு பழங்களை எடுத்து கொள்வதால், சத்துக்கள் உடலில் சேர உதவுவதுடன், ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது.
![]() |
2. மாதுளை : மாதுளம்பழத்தில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நிறைய உள்ளது. தொடர்ந்து மாதுளையை எடுத்து கொள்வோருக்கு, ரத்தத்தில் ஹீமோகுளோபின்
அளவு அதிகரிக்கும்.
3. பேரீச்சம்பழம்: பேரீச்சம்பழத்தில் இரும்புச்சத்து உள்ளது. பேரீச்சம்பழம் எடுத்து கொண்டால், உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.
![]() |
4. பீட்ரூட் : பீட்ரூட்டில் இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து, போலிக் அமிலம் உள்ளிட்டவை உள்ளன. உணவில் பீட்ரூட் எடுத்து கொள்வோருக்கு ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும்.
5. பருப்பு வகைகள் : நிலக்கடலை, பட்டாணி மற்றும் பீன்ஸில் போலிக் அமிலம் நிறைந்துள்ளது. ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க எடுத்து கொள்ளலாம்.
![]() |
6. தர்பூசணி பழம் : தர்பூசணி பழத்தில் வைட்டமின் - சி, இரும்புச்சத்து நிறைந்துள்ளது. ஹீமோகுளோபினை அதிகரிக்க முயற்சிப்போர், தர்பூசணி பழத்தை எடுத்து கொள்ளலாம்.
7. பூசணி விதை : பூசணி விதையில், இரும்புச்சத்துடன், கால்சியம், மேக்னீசியம், மாங்கனீசு உள்ளன. உணவில் பூசணி விதைகளை சேர்த்து வந்தால், உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க உதவும்.



