sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

லைப் ஸ்டைல்

/

ஆரோக்கியம்

/

பாதங்கள் அடிக்கடி மரத்துப் போகின்றனவா? காரணம் இதுதான்..!

/

பாதங்கள் அடிக்கடி மரத்துப் போகின்றனவா? காரணம் இதுதான்..!

பாதங்கள் அடிக்கடி மரத்துப் போகின்றனவா? காரணம் இதுதான்..!

பாதங்கள் அடிக்கடி மரத்துப் போகின்றனவா? காரணம் இதுதான்..!


UPDATED : மார் 26, 2023 08:21 PM

ADDED : மார் 26, 2023 08:19 PM

Google News

UPDATED : மார் 26, 2023 08:21 PM ADDED : மார் 26, 2023 08:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாம் ஒரே இடத்தில் பல மணிநேரம் அசையாமல் அமர்ந்திருக்கும்போது ரத்தவோட்டம் தடைபடுவதன் காரணமாக கால் மற்றும் பாதங்கள் மரத்துப் போகின்றன. இப்பிரச்னைக்கு மேலும் பல காரணங்கள் உண்டு. கால்கள், பாதங்கள் மரத்துப் போவதற்கான காரணம் மற்றும் தீர்வைக் காண்போம்.

உடல் உறுப்புகள் மரத்துப்போவது நோய் அன்று. நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். மூளை, முதுகுத்தண்டு வடத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்படுவதன் அறிகுறியாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. இரண்டு கால்களும் மரத்துப் போனால் அது சர்க்கரை நோய்க்கான அறிகுறி ஆகும். ஒருவருக்கு பல ஆண்டுகளாக இந்த மரத்துப்போதல் பிரச்னை இருந்தால் அது மரபணுக்களின் கோளாறாக இருக்க வாய்ப்புள்ளது. ஆன்டிபயாடிக், புற்றுநோய் மாத்திரை சாப்பிட்டாலும் கை, கால்கள் அடிக்கடி மரத்துப்போகும். மேலும் தைராய்டு ஹார்மோன்களின் சுரப்பிகள் குறைந்தாலும் இப்பிரச்சனை ஏற்படலாம்.

Image 1088653


உடல் எடை அதிகரித்து, உடலில் அதிகளவு கொழுப்பு சேர்ந்தாலும் மரத்துப்போகும் பிரச்னை ஏற்படும். இதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்கான சிகிச்சைகளை முறையாக அளித்தாலே பிரச்னையை சரிசெய்துவிட முடியும். வைட்டமின் பி-12 குறைபாடுகள் இருந்தாலும் கை, கால் மரத்துப்போகும் பிரச்னை ஏற்படும். இப்பிரச்னை நீங்க வைட்டமின் பி-12 நிறைந்துள்ள உணவுகளை உட்கொள்ளவது நல்லது. மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கும் அதிக நேரம் கணினியில் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கும் மரத்துப்போகும் பிரச்னை ஏற்படும்.

Image 1088654
ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள் உடலுக்கு அவ்வப்போது அசைவு தந்தால் இப்பிரச்னை நீங்கும். மேலும் தினசரி உடற்பயிற்சி, நடைப்பயிற்சி அவசியம்.






      Dinamalar
      Follow us