sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

லைப் ஸ்டைல்

/

ஆரோக்கியம்

/

டாட்டூ போடனுமா?- தெரிந்து கொள்வது அவசியம்...!

/

டாட்டூ போடனுமா?- தெரிந்து கொள்வது அவசியம்...!

டாட்டூ போடனுமா?- தெரிந்து கொள்வது அவசியம்...!

டாட்டூ போடனுமா?- தெரிந்து கொள்வது அவசியம்...!


UPDATED : ஏப் 10, 2023 10:52 AM

ADDED : ஏப் 10, 2023 10:12 AM

Google News

UPDATED : ஏப் 10, 2023 10:52 AM ADDED : ஏப் 10, 2023 10:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டாட்டூ என்று அழைக்கப்படும் உடம்பில் பச்சை குத்திக்கொள்வது தற்போது அனைவரின் விருப்பமாக உள்ளது. இந்த டாட்டூகள் பலவிதமான வகைகளிலும் உள்ளது. கடவுள் படத்தில் தொடங்கி தங்களுக்குப் பிடித்தவர்களின் உருவம் என அனைத்தையும் தற்போதுள்ள இளம் சமுதாயத்தினர் உடம்பில் டாட்டூவாக குத்திக் கொள்கின்றனர்.

இளம் சமுதாயத்தினரைத் தவிர்த்து வயதானோரும், இந்த டாட்டூ மோகத்திற்கு அடிமையாகியுள்ளனர். கடந்த காலத்தில் கை, மார்பு பகுதிகளில் மட்டும் குத்திக்கொள்ளும் பழக்கத்திலிருந்த இந்த டாட்டூ(பச்சை குத்துதல்) முறை தற்போது, உடலின் அந்தரங்க உறுப்பு வரை நீண்டுள்ளது.

Image 1095891
இப்படி ஆண், பெண் என மாறி, மாறி பச்சை(டாட்டூ) குத்திக்கொள்வது, பொதுவானதாக இருக்கும் அதே வேளையில், அவற்றுடன் தொடர்புடைய அபாயங்களைப் புரிந்துகொள்வதும் அவசியமாகும். டாட்டூ மை நச்சுத்தன்மை வாய்ந்தது என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. தீங்கு விளைவிக்கும் என்று தெரிந்தால் அவர்கள் அதைச் செய்ய மாட்டார்கள் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Image 1095892
உடலின் உள் உறுப்புகளுக்கு அரணாக இருப்பது தோல். இதில் நாம் டாட்டூ மையை புகுத்தும்போது, ஆர்சனிக், பெரிலியம் மற்றும் ஈயம் போன்ற பல உலோகங்களைத் தோலுக்கு அறிமுகப்படுத்துகிறோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

Image 1095889
இந்த உலோகங்கள் இதய நோய்கள், நுரையீரல் நோய்கள், கல்லீரல் மற்றும் சிறுநீரக நோய்கள் மற்றும் தோல் நிலைகள் போன்ற பல நோய்களுக்கு வழிவகுக்கும்.

Image 1095890
இந்த மை, தோல் மேற்பரப்பில் ஒருமுறை செலுத்தப்படுவதால், முதன்மையான நறுமண அமின்களை உருவாக்குகிறது. இது இயற்கையில் புற்றுநோயை உண்டாக்கும் மற்றும் புற்றுநோய்க்கு வழிவகுப்பவையாகும்.

Image 1095888
டாட்டூ மை, சரியாகத் தேர்ந்தெடுக்கப்படாவிட்டால், தோல் மற்றும் உடல்நிலையில் நிறைய ஒவ்வாமைகளை ஏற்படுத்தும். எனவே, பச்சை குத்துவதற்கு முன்பு நாம் கவனமாக இருக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us